இலங்கை- அவுஸ்திரேலிய போட்டியின் பின்னர் லண்டனில் இடம்பெற்ற அசம்பாவிதம்

photo (10) - Copy-MJ

லண்டன்: நேற்று முன்தினம் திங்கட்கிழமை பிற்பகல் லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான மிக முக்கிய போட்டியின் பின்னர் ஓவல் மைதான பிரதான வாயிலுக்கு முன்னிலையில் அசம்பாவிதங்கள் சில இடம்பெற்றன.

காலை தொடக்கம் லண்டன் ஓவல் மைதானத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சில ஆதரவாளர்கள் புலிக் கொடிகளுடனும், இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான பதாதைகளையும் தாங்கிக்கொண்டு நின்றனர்.

போட்டியைக் காண்பதற்கு அணியணியாக வருகை தந்த இலங்கை அணியின் ஆதரவாளர்களை நோக்கி குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சுலோகங்களை காண்பித்தனர்.

photo (2) - Copy

போட்டியைக் காண்பதற்கு வருகை தந்துகொண்டிருக்கும் இலங்கை இரசிகர்களுக்கும், எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அங்கு குழுமியிருந்த விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கும் பொலிசாரும், மைதான பாதுகாப்பு ஊழியர்களும் பலத்த பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்தனர்.

போட்டி நிறைவில் வெற்றிக் களிப்புடன் ஆராவாரங்களுடன் திரண்டு வந்த இலங்கை இரசிகர்களில் சிலர் இவர்களை நோக்கி கேளி செய்தனர். இருதரப்பினரின் வாக்குவாதங்களும் மேலோங்கி இறுதியில் கைகலப்பு இடம்பெற்றது.

photo (6)

அதனைத் தொடர்ந்து  மேலதிக பொலிசாரும், மைதான காவல் ஊழியர்களும் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இலங்கை இரசிகர்களை வேகமாக வீடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

குறித்த அசம்பாவிதங்களைத் தொடர்ந்து அவ்வீதி சில மணிநேரம் மூடப்பட்டது. இதனால் வாகன நெரிசல் மறுபக்கத்தில் ஏற்பட்டது.

photo (3)

இதற்கு முன்னர் இதே மைதானத்தில் இடம்பெற்ற இங்கிலாந்து-இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டியிலும் இத்தகைய தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இலங்கை அணி விளையாடுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அப்போட்டியில் இங்கிலாந்து இரசிகர்கள் அதிகமாக இருந்ததால் அன்று அசம்பாவிதங்கள் இடம்பெறவில்லை.

photo (4)

இவ்வாறான எதிர்ப்பு போராட்டங்களை  விடுதலைப் புலிகளின்  ஆதரவாளர்கள் லண்டனில் அண்மைக்காலமாக செய்து வருகின்றனர்.

கடந்த வருடம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஸவின் வருகைக்கும், அதற்கு முன்னர் இங்கிலாந்துடன் கிரிக்கட் தொடரில் கலந்துகொள்ள வந்திருந்த  இலங்கை கிரிக்கட் அணிக்கும் எதிராக மேற்படி எதிர்ப்பு கோசங்கள் லண்டனில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

photo (10) - Copy

Published by

Leave a comment