லண்டன்: நேற்று இரவு நடந்து முடிந்த ஐ.சி.சி சம்பியன் கிண்ணத்துக்கான இறுதி லீக் போட்டியில் இலங்கை, அவுஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சையில் களமிறங்கி இருந்தன. அவுஸ்திரேலியாவின் இறுதித் துடுப்பாட்ட வீரர்களை இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் ஆட்டமிழக்க வைப்பதில் கடுமையான போராட்டம் நடாத்தினர்.
இன்னும் 20 ஓட்டங்கள் அவுஸ்திரேலியா பெறுமாயின் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றுவிடும். இலங்கை அரை இறுதி வாய்ப்பை இழக்கும்.
192 ஓட்டங்களுக்குள் அவுஸ்திரேலியாவின் 9 விக்கட்டுக்கள் வீழ்த்தப்பட்டன. ஆனால் இறுதியாக களத்தில் துடுப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மெக் கே மற்றும் டொஹட்ரி ஆகியோரின் அபாரமான நிதானமான துடுப்பாட்டத்தில் இலங்கை வீரர்களும் பல்லாயிரக்கணக்கான இலங்கை இரசிகர்களும் செய்வதறியாது இருந்த போதுதான் அந்த திருப்பம் லண்டன் ஓவல் மைதானத்தில் இனிமையான ஓர் மாலை நேரத்தில் இடம்பெற்றது.
அவற்றைக் காண்பதற்கு பின்வரும் ஒளி வடிவத்தை ‘கிளிக்’ செய்யவும்.


Leave a comment