மட்டக்களப்பு: கிழக்கு மாகாண கட்டளை தளபதியின் நேற்று விஷ்வ ஹிந்து பரிசத் என்னும் அமைப்பின் பெயரில் சிலர் வெலிக்கந்தையில் சந்தித்துள்ளனர். இவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்து சமயத்தின் மூலம் மக்களை சமாதானத்துக்கு கொண்டு வர உள்ளதாக கூறியுள்ளனர்.
அதுமட்டுமின்றி, இவ் ஒன்றுகூடலுக்கு தலைமை தாங்கிய விஸ்வ ஹிந்து பரிசத் என தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் சுதர்சன் என்பவர் இராணுவத்தினரின் இரகசிய உளவாளியாக செயற்படுகின்றார்.
அண்மையில் தமது குருக்கள்மடம் கிராமத்தில் இராணுவ முகாம் அமைப்பது பொருத்தமானது என சிலர் இராணுவத்தினருக்கு வழங்கிய ஆலேசனையில் குருக்கள்மடத்தில் இராணுவ முகாம் வைக்க நடவடிக்கை எடுக்கின்றனர். இதற்காக குருக்கள்மடத்தில் பாடசாலை முன்பு இயங்கிய காணி சுதர்சனால் இராணுவத்திற்கு இடம் காட்டப்பட்டுள்ளது.
இன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுடன் இணைந்து இராணுவத்தினரும், இராணுவ புலனாய்வு பிரிவும் செயற்படுவதனால் இவர்கள் தங்களுடன் உள்ள விஷ்வ ஹிந்துப் பரிசத் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளரும், இந்து சேவா சங்க மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளரும், குருக்கள்மடத்தை சேர்ந்த சுதர்சனை இணைந்து கொண்டு இராணுவத்தின் செயற்பாடுகளுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பாடு புரிந்து வருகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் புத்தர் சிலை வைப்பது, சிங்கள குடியேற்றம், இந்துக் கோயில் உடைப்பு, இந்து விக்கரங்கள் உடைப்பு போன்றவற்றுக்கு இராணுவமே காரணம் என பல வகையிலும் குற்றம் சாட்டும் இவ்வேளையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு, விஷ்வ ஹிந்துப் பரிசத் அமைப்பினதும், இந்து சேவா சங்கத்தினதும் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளர் தம்மை அடையாளம் காட்டிவரும் சுதர்சன் என்பவரை சமய நடவடிக்கையில் இராணுவத்துக்கு உதவும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர்.
இவ்வேளை ஆரையம்பதியில் முஸ்லிம்களின் அட்டகாசத்தை அடக்க தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் செயலாளரும், ஆரையம்பதியை சேர்ந்தவருமான பிரசாந்தன் அவரது கிராமத்தில் அருகிலுள்ள தாளங்குடாவில் இராணுவ முகாமை ஏற்படுத்த ஒழுங்கு செய்தார். அத்தோடு சுதர்சன் என்னும் குருக்கள்மடத்தை சேர்ந்த தமது குருக்கள்மடம் கிராமத்தில் இராணுவ முகாமை எற்பாடு செய்துள்ளார்.
இந்துசேவா சங்கம் என்ற ரீதியில் கூடியது 10 பேரைக் கொண்டு செயற்பட்டு வரும் சுதர்சன் என்பவர் சில காலம் வவுனியாவில் செயற்பட்டவர். இவ்வேளையிலே இவருக்கும் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கும் தொடர்பு உருவானது.
இன்று கோயில்களை பாதுகாப்போம் என்ற ரீதியில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள இராணுவ புலனாய்வு பிரிவே சுதர்சனுக்கு ஆலோசனை வழங்கியது. இதற்கு முதல் நாள் கோயில் சிலை உடைப்புக்கு எதிராக தேத்தாத்தீவு கிராமத்தில் இருந்து குருக்கள்மடம் மட்டும் நடைபெறவிருந்தது.
ஒரு இந்து அமைப்பின் அமைதி பேரணியை தடை செய்த பொலிஸார் இதற்கு தடை விதிக்கவில்லை. சிலை உடைக்கப்பட்ட பகுதியில் நடைபெறும் அமைதிப் பேரணிக்கு தடை மட்டக்களப்பு நகரில் நடைபெறும் ஆர்பாட்டத்துக்கு அனுமதி.
முதல் நாள் கிழக்கு பிராந்திய இராணுவ கட்டளை தளபதியை சந்தித்து விட்டு மறுநாள் ஆர்ப்பாட்டம் செய்த நாடகம் கோயில் உடைப்பு, சிலை உடைப்பு சம்பந்தமான இராணுவ ஆக்கிரமிப்பினை மறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.
எனவே இந்து பொது மக்கள் இராணுவ புலானய்வு பிரிவினர் இந்து அமைப்புக்களை பயன்படுத்தி எமது இந்து சமயத்தை அழிக்க முற்படும் நிகழ்வுகளுக்கு துணைபோக வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட இந்து தமிழ் பாதுகாப்பு முன்னணி வேண்டுகோள் விடுக்கின்றது.TW
Leave a comment