மீண்டும் முஸ்லிம்களின் ஆடையில் கைவைக்கும் பொதுபல சேனா!

bothuAK-77

கொழும்பு: ஹலால் விடயத்தில் வெற்றிபெற்றதையடுத்து, மீண்டும் மீண்டும் முஸ்லிம்கள் விடயத்தில் மூக்கை நுழைப்பதில் பொது பல சேனா இருந்துவருவதை முஸ்லிம் சமூகம் மறக்க முடியாது.

முகத்தை மூடிக்கொண்டு, வங்கிகளிலும், பொது இடங்களிலும் முஸ்லிம் பெண்கள் செல்வதால் அடையாளம் காண்பதில் பாரிய சிக்கல்கள் ஏற்படுவதாக பொது பல சேனா பகிரங்கமாக நேற்று தெரிவித்திருந்தது.

அரபு நாடுகள்போல் இலங்கை காட்சியளிப்பதை தாங்கள் ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம் எனவும், முகத்திரை, கறுப்புடைகள் அணிந்து செல்லும் பெண்களுக்கு எதிராக போராடுவோம் எனவும் பொது பல சேனா தூங்கிக்கிடக்கும் முஸ்லிம் பாராளுமன்ற சமூகத்துக்கும் மேலும் ஒரு சவாலை தற்பொழுது விடுத்திருக்கின்றது.

Published by

Leave a comment