இரணைமடு …

jvpnews_ernimadu4[1]யாழ். குடாநாட்டை தென்னிலங்கையுடன் விமான மார்க்கமாக இணைப்பதற்கு பலாலி விமான நிலையம் இருக்கின்றது. முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய வட மாகாணத்தின் பிரதான மாவட்டங்களை தென்னிலங்கையுடன் இணைப்பதற்கான இரணைமடு விமான இறங்குதரையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று காலை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார்.

இரணைமடு விமான இறங்கு தரை நாட்டின் வடபகுதியையும், தென் பகுதியையும் இணைக்கும் ஒரு நட்பின் சின்னமாக விளங்குகிறதென்று இந்த நிகழ்வை பார்க்கச் சென்ற பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இரணைமடு பிரதேசத்தின் வரலாறு 5ம் நூற்றாண்டில் இருந்து ஆரம்பிக்கின்றது. இரணைமடு பிரதேசத்திற்கு மெருகூட்டுவதாக இரணைமடு குளம் அமைந்திருப்பதனால் அது ஒரு புதிய யுகத்தின் ஆரம்பம் என்று கருதப்படுகிறது. அன்று இரணைமடு பிரதேசம் காட்டு மரங்க ளையும், புதர்களையும் கொண்டிருந்தது. இப் பிரதேசத்திலேயே எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதம் வளர்ந்து தழைத்தோங்கியது.

iranaimadu

இது கிளிநொச்சி நகரத்தில் இருந்து கிழக்கு திசையில் சில கிலோமீற்றர்களுக்கு அப்பால் அமைந்திருக்கிறது. அன்று பயங்கரவாதத்தின் தலைமையகமாக இருந்த இரணைமடு, இன்று இலங்கையின் ஐக்கியத்தையும், மக்களிடையே நல்லிணக்கப்பாட்டையும் வளர்ப்பதற்கான ஒரு கேந்திர நிலையமாக மாறியிருக்கிறது.

இரணைமடு விமான இறங்குதரை இலங்கையின் உத்தியோகபூர்வமான 16ஆவது விமான இறங்குதரையாக இப்போது பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்த இறங்குதரையின் நீளம் 1500மீற்றராகும். அதன் அகலம் 25 மீற்றர்களாகும். இந்த இறங்கு தரையை முழுமையாக இலங்கை விமானப்படையின் அதிகாரிகளும் வீரர்களுமே அரும்பாடுபட்டு நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்துள்ளார்கள்.

விரைவில் இரணைமடு விமான இறங்கு தரையில் சகல உள்ளூர் விமான சேவை விமானங்களும் இறங்குவதற்கான வசதி செய்து கொடுக்கப்படும் என்று விமானப்படையின் பேச்சாளரான விங் கொமாண்டர் ஷிராஸ் ஜல்தீன் அறிவித்துள்ளார். இந்த புதிய இறங்குதரை சர்வதேச விமானப் போக்குவரத்து தரத்துக்கு ஏற்புடைய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

விமான இறங்குதரைக்கான மின் விளக்குகளை பொருத்தும் பணிகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப் பதாக இந்தப் பணிகளுக்கு பொறுப்பான விங் கொமாண்டர் சுமேத டி சில்வா கூறுகிறார். இலங்கை விமானப் படைக்கு சொந்தமான மிகப் பெரிய விமானமான பாரிய பொதிகளை ஏற்றிச் செல்லும் சி.130 விமானமும் இந்த இறங்கு தரையில் வந்திறங்கக்கூடியதாக இருக்கும். விமான இறங்குதரையில் சகல வர்த்தக ரீதியிலான பயணி களை ஏற்றிச் செல்லும் விமானங்களும் வந்திறங்கு வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

jvpnews_ernimadu3[1]

தாதுசேன மன்னன் இரணைமடு பிரதேசத்தின் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்காக இரணைமடு குளத்தை கட்டியதாக வரலாறு கூறுகின்றது. ஆயினும் எல்.ரி.ரி.ஈ. யுத்தத்தினால் இரணைமடு என்ற பெயர் சர்வதேச ரீதியில் பிரபல்யம் பெற ஆரம்பித்தது. யுத்தத்துக்கு பின்னர் கவனிப்பாரற்ற ஒரு காடாக மாறவிருந்த இரணைமடுவின் முன்னாள் இறங்குதரையை அழிந்துவிடாமல் பாதுகாத்து, அதனை இன்று சர்வதேச ரீதியில் அங்கீகாரத்தை பெறக்கூடிய விமான இறங்கு தரையாக மாற்றிய சாதனையை இலங்கை விமானப்படையின் தளபதியும் அதைச் சேர்ந்த அனைவரும் ஏற்படுத்தினார்கள்.

எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம இந்த விமான இறங்குதரையின் நிர்மாணப் பணிகளை மேற்கொண்டு வந்த காலகட்டத்தில் இந்தப் பிரதேசம் விமானம் இறங்குவதற்கு பொருத்த மான இடமா என்பதை ஊர்ஜிதம் செய்வதற்காக வை12 ரக விமானத்துக்கு தானே விமான ஓட்டி யாக இருந்து அதனை இந்த இறங்கு தரையில் வெற்றிகரமாக இறக்கினார்.

ஆரம்பத்தில் எல்.ரி.ரி.ஈ. பயன்படுத்திய விமான இறங்குதரையை நாம் ஏன் புனரமைத்து பயன் படுத்துவான் என்ற எதிர்ப்பு பல வட்டாரங்களில் இருந்து கிளம்பிய போதிலும், இப்போது இந்த புதுப்பிக்கப்பட்டுள்ள விமான இறங்குதரையைப் பார்த்து எல்லோரும் இதுவொரு நல்ல முயற்சி என்று பாராட்டும் அளவுக்கு இலங்கை விமானப் படையினர் இந்தப் பணியை சிறப்பாக செய்து ள்ளனர்.

இரணைமடு விமான இறங்கு தரையுடன் இர ணைமடு பிரதேசம் உல்லாசப் பயணிகளின் சொர்க்கப்புரியாக மாறிவிடும். காரணம், அருகி லுள்ள இரணைமடு குளமும், அப்பால் உள்ள கடலேறியும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை ஈர்ந்து இழுக்கக்கூடிய விந்தைக்குரிய பிரதேசமாக இருக்குமென்று உல்லாசப் பயணத்துறையுடன் சம்பந்தப்பட்டோர் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

இரணைமடு பிரதேசம் பண்டைய காலத்தில் வடபகுதிக்கு நீர்ப்பாசனத்தை வழங்கும் ஒரு இதயத்தைப் போல் விளங்கியது. பின்னர் அது எல்.ரி.ரி.ஈ. யுத்தத்தினால் சின்னாபின்னமடைந்து இன்று அழிவிலிருந்து மீண்டெழுந்து, இலங்கை யின் சிகரத்தில் வீற்றிருக்கும் ஒரு இரத்தினக் கல்லாக உருமாறி, எங்கள் நாட்டுக்கு பொருளாதார வளத்தையும், சமாதானத்தையும், மகிழ்ச்சி யையும் அளிக்கும் ஒரு வரலாற்று சின்னமாக மாறியிருக்கிறது.

-தினகரன்

Published by

Leave a comment