A9 வட பகுதி மக்களின் சொர்க்கத்திற்கான வாயில்: வரி செலுத்தாமல் சகலரும் பயணிக்கலாம்

daglasகிளிநொச்சி: தென் பகுதியை விடவும் யுத்தம் காரணமாக அழிவுற்ற வடக்கு, கிழக்குப் பிரதேசங்களை மீளக் கட்டியெழுப்புவதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விஷேட கவனம் செலுத்தி வருகின்றார் என்று பாரம்பரிய கைத்தொழில் மற்றும் கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சியில் தெரிவித்தார்.

ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சி நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் தேவானந்தா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், அன்று ஏ- 9 வீதி திறந்து வைக்கப்பட்ட போது, இது எமது மக்களுக்குச் சுவர்க்கத்திற்கான வாயிலாக அமையும் என்று கூறினேன். அதுவே இப்போது இடம்பெற்றிருக்கின்றது.

ஒரு காலத்தில் இவ்வீதி வழியாக சென்றவர்களிடம் வரி அறிவிடப்பட்டது. இப்போது அப்படியான நிலைமை இல்லை.

எல்லா மக்களும் அச்சம், பீதியின்றி சுதந்திரமாக இவ்வீதியைப் பயன்படுத்தக் கூடிய சூழல் அரசினால் ஏற்படுத்தப்பட் டிருக்கின்றது.

தமிழ் மக்களுக்கு சேவை செய்வதாகக் கூறி அம்மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டவர்கள் இப்போது அற்ப அரசியல் நலன்களுக்காக அம் மக்களின் ஆணையைப் பயன்படுத்துகின்றார்கள். இதனை மக்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் எமது ஜனாதிபதி பிரதேச பேதங்கள் பாராது எல்லா பிரதேசங்களையும் ஒரே விதமாக அபிவிருத்தி செய்யவே நடவடிக்கை எடுத்து வருகின்றார். அதற்கு இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களும் நல்ல எடுத்துக்காட்டு.

ஜனாதிபதி அவர்கள் யுத்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் உயிர்களைத் தவிர்ந்த இழப்புகள் அனைத்தையும் மீளப்பெற்றுத் தருவதாகக் கூறினார். அது இப்போது இடம்பெற்று வருகின்றது என்று குறிப்பிட்டார்.

-தினகரன்

Published by

Leave a comment