நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட பொதுக் கூட்டம் 14.06.2013 நேற்றைய தினம் கடற்கரை வீதியில் அமைந்துள்ள அதன் வளாக முன்றலில் சிறப்பாக இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள், சமகால உள்ளுர் அரசியல் சூழ்நிலை மற்றும் நகரசபையின் தற்கால முன்னெடுப்புகள் எனும் தலைப்புகளில், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபைத்தலைவர் அஷ்ஷெய்க் MBM. பிர்தௌஸ் நளீமி மற்றும் நகரசபை உறுப்பினர் அஷ்ஷெய்க் ALM. சபில் நமீளி மற்றும் சூறா சபை உறுப்பினர் பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான் ஆகியோர் உரையாற்றினர்.
இக்கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன் மிக அமைதியான முறையில் இக்கூட்டம் நடைபெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமானது, இரு வாரங்களுக்கு முன்னர் இப்பொதுக்கூட்டத்தினை நடாத்துவதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்த போதிலும், காத்தான்குடி பொலீசாரினால் இக்கூட்டத்திற்கான ஒலிபெருக்கி அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இக்கூட்டம் இறுதி நேரத்தில் இரத்துச்செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
எனினும் நேற்றைய தினம் இரவு 10.30 மணிவரை நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில் தங்கள் அழைப்பை ஏற்று கலந்து கொண்ட அனைத்துப்பொதுமக்களுக்கும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.





Leave a comment