காங்கேயனோடை பிரதேச சகோதரர்களுடனான PMGGயின் கலந்துரையாடல்

Yourkattankudy
Yourkattankudy

PMGG ஊடகப்பிரிவு

காங்கேயனோடை: காங்கேயனோடை பிரதேசத்தைச் சேர்ந்த சகோதரர்களுடனான விசேட கலந்துரையாடலொன்று PMGGயினால் நடாத்தப்பட்டது.

இக்கலந்துரையாடல் கடந்த 13.06.2013 அன்று காத்தான்குடி கடற்கரை வீதி CB காஸிம் மாவத்தையில் அமைந்துள்ள PMGGயின் மக்கள் அரங்கில் நடை பெற்றது.

இக்கலந்துரையாடலில் காங்கேயனோடை பிரதேசத்தைச் சேர்ந்த ஏறத்தாள 50 சகோதரர்களும், PMGGயின் சூறாசபை மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இஸா தொழுகையைத் தொடர்ந்து ஆரம்பமான இவ்வமர்வு அன்றிரவு 11.00 மணி வரை நடைபெற்றது. இக்கலந்துரையாடல் ஆரம்பத்தில் PMGG யின் சூறா சபை அமீர் பிர்தௌஸ் நழீமி அவர்களின் தலைமையில் அல்குர்ஆன் ஓதும் நிகழ்வோடு ஆரம்பமாகின.

சூறா சபை உறுப்பினர் பொறியியலாளர் பழ்லுல் ஹக் அவர்களினால் PMGGயின் இலக்குகள், நோக்கங்கள், கொள்கைப் பின்னணிகள் மற்றும் அதன் செயற்பாட்டு கட்டமைப்பு தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

அதனைத் தொடாந்து நடைபெற்ற கலந்துரையாடலில் காங்கேயனோடை சகோதரர்கள் பலரும் தமது கருத்துக்களை முன் வைத்தனர்.

ஆரம்ப காலங்களில் தாம் எவ்வாறு PMGGயை நோக்கினோம், இப்போது PMGGயை நோக்கி நாம் ஏன் கவரப்பட்டோம் என்ற கருத்துக்களை அவர்கள் முன் வைத்ததுடன், முஸ்லிம்களுக்கான சமூக அரசியல் பயணத்திற்கு தலைமை தாங்கக்கூடிய நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு இயக்கமாக PMGGயை மாத்திரமே தாம் முழுமையாகக் காண்பதாகவும், அதன் செயற்திட்டங்களை இன்னும் விரிவு படுத்துவதற்கு முன்நின்று உழைப்பதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் அவர்கள் உறுதியளித்தனர்.

கடந்த காலங்களில் பல்வேறு அரசியல் முகாம்களிலிருந்து செயற்பட்டபோதிலும் தற்போது PMGGயுடன் இணைந்து இயங்குவதானது தமக்கு ஆழ்ந்த திருப்தியை அளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இக்கலந்துரையாடலின் இறுதியில் PMGGயின் வேலைத் திட்டங்களை காங்கேயனோடை பிரதேசத்தில் முன்னெடுத்துச் செல்வதற்கான செயற்குழு ஒன்றும் தெரிவு செய்யப்பட்டது. 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment