கிண்ணியா: கிண்ணியாவை அழகுபடுத்தி பசுமையாக்கும் வேலைத்திட்டம் நகரசபை நகரபிதா டொக்டர் எம்.எம். ஹில்மியினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் கிண்ணியா-மட்டக்களப்பு (தோனா) கரையோர வீதிகளில் மரங்கள் நடுதல், பொழுது போக்குக்கான கொட்டில்கள் அமைத்தல் போன்ற விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படும் நிலையில் சூழல் சுற்றாடல் சம்பந்தமான விடயங்களுக்கு பொறுப்பான கிண்ணியா பொலிஸ்நிலைய பொலிஸ் ஐ.பி. ஜயசிரி கேட்டுக்கொண்டதற்கிணங்க நகரபிதாவினால் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
பொலிஸ் நடமாடும் சேவை கிண்ணியா உப்பாறு றோமன் கத்தோலிக பாடசாலையில் நாளை நடைபெறவுள்ளது. இதனையொட்டி மரநடுகை இடம்பெறவுள்ளதால் குறித்த மரக்கன்றுகள் சூழலை பாதுகாத்து அழகுபடுத்தும் திட்டத்திற்காக கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் எம்.எம்.ஹில்மி அவர்களால் குறித்த மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டது.



Leave a comment