பிள்ளையாரடியில் புத்தர் சிலை நிறுவவேண்டும்: மனித உரிமை அமைப்பிடம் சுமணரத்ன தேரர் தஞ்சம்!

130524162123_batticaloa_entrence_624x351_bbc_nocredit[1]மட்டக்களப்பு: இந்துக்கள் நிறைந்து வாழும் மட்டக்களப்பு பிள்ளையாரடி வளைவில் புத்தர் சிலை நிறுவும் நடவடிக்கைக்கு தடை விதிக்கப்பட்டமை தொடர்பில் மட்டக்களப்பு மங்களராமய விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

இது விடயமாக செவ்வாய்க்கிழமை, எழுத்து மூலமான முறைப்பாடொன்றை மட்டக்களப்பு மங்களராமய விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர், தன்னிடம் கையளித்துள்ளதாக மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் இ.மனோகரன் தெரிவித்தார்.

இதனிடையே இந்த விவகாரம் ஏற்கெனவே மட்டக்களப்பு நீதிமன்றத்தின் கவனத்திற்கு பொலிஸாரினால் கொண்டுவரப்பட்டு குறித்த இடத்தில் புத்தர் சிலை நிறுவுவது பொதுத் தொல்லையையும் சமூக அமைதிக்குப் பங்கத்தையும் ஏற்படுத்தும் என பொலிஸார் தமது அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததன் பேரில் குறித்த இடத்தில் புத்தர் சிலை வைப்பதற்கு தடை விதித்து அது தொடர்பான வேலைகளை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த புத்தர் சிலை நிறுவப்பட்டதை எதிர்த்து கடந்த மாதம் இப்பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. மக்களிடையே சமாதானத்தை மேற்கொள்ள வேண்டிய ஓர் தருணத்தில், இத்தகைய புத்தர் சிலை ஓர் இந்துக்கள் வாழும் தமிழர் பிரதேசத்தில் நிறுவப்படுவது கவலையளிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment