கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு 24 மணி நேர எச்சரிக்கை

daily_painting_901_windy_day_on_the_ocean_acf65a267c441329be646b90f23e5c63[1]கொழும்பு: அடுத்துவரும் 24 மணி நேர காலத்திற்குள் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாமென வளி மண்டலவியல் திணைக்களம் கடற்றொழிலாளர்களுக்கு நேற்று முன்னெச்சரிக்கை விடுத்தது. மன்னார், கொழும்பு, காலி ஊடாக பொத்துவில் வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்பு கொந்தளிப்பாக காணப்படுவதால் கடற் றொழிலில் ஈடுபடுவது உகப்பானதல்ல என்றும் அத்திணைக்களத்தின் அதிகாரியொரு வர் நேற்றுக் கூறினார்.

இக் கடற்பரப்பில் மணித்தியாலத்திற்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீச முடியும் எனவும் அவர் கூறினார். இதேவேளை, இலங்கையைச் சூழ காற்றுடன் கூடிய கால நிலை நிலவுவதால் மேல், சப்ரகமுவ, தென் ஆகிய மாகாணங்களிலும் புத்தளம், குருநாகல் மாவட்டங்களிலும் இடையிடையே மழை பெய்யும். அது சில இடங்கள் 100 மில்லி மீற்றர்கள் வரை கனத்த மழையாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சிப் பதிவுப்படி ஆகக் கூடிய மழை கெனியன் பிரதேசத்தில் 118 மில்லி. மீற்றர்களாகப் பெய்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கெனியன், லக்ஷபான, மேல்கொத்மலை, மெளசாகலை ஆகிய நீர்த்தேக்கங்களின் இரு வான் கதவுகள் படி திறக்க ப்பட்டு மேலதிக நீர் வெளி யேற்றப் படுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் சரத் லால் குமார கூறினார்.

இந் நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியேற்றப்படுவதாக கீழ் மட்டத்தில் மக்களுக்கு அறிவூட்டப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

-தினகரன்

Published by

Leave a comment