– ரைஸ்
கிண்ணியா: 2013 ஆம் ஆண்டின் தேசிய சுற்றாடல் வார செயற்பாடுகள் நடைபெற்றுவரும் நிலையில் கிண்ணியா நகரசபையிலும் இவ்வாரத்திற்கான செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இச்செயற்பாடுகளில் சிரமதானம், மரநடுகை, கழிவகற்றல், விழிப்புணர்வூட்டல் போன்ற விடயங்கள் செயற்படுத்தப்பட்டுவரும் நிலையில் இன்று 10.06.2013 ரஹ்மானியா மையவாடி சிரமதானம் இடம்பெற்றது.
தேசிய சுற்றாடல் வார நிகழ்வின் மற்றுமொரு நிகழ்வாக ரஹ்மானியா மையவாடி சிரமதானம் இன்று கிண்ணியா நகரபிதா டொக்டர் எம்.எம்.ஹில்மி தலைமையில் இடம்பெற்றது. கிண்ணியாவை அழகுபடுத்தும் செயற்திட்டத்தின் மற்றுமொரு நிகழ்வாக இச்சிரமதானமும் அமைந்திருந்தன. இதன்போது மையவாடியில் நகரபிதா ஹில்மியினால் மரம் நாட்டிவைக்கப்பட்டதோடு மையவாடியை சுற்றியுள்ள மதிலுக்கான பெயின்டும் அடிக்கப்பட்டது.
இச்சிரமதான நிகழ்வின் போது கிண்ணியா நகரசபை நகரபிதா எம்.எம்.ஹில்மி, நகரசபை உறுப்பினர் நிஜாம், முன்னால் நகரசபை உறுப்பினர் சட்டத்தரணி றிஸ்வான் நகரசபை உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், கிழக்கு மாகாண சமாதான நீதவான்கள் மற்றும் மனித உரிமை ஸ்தாபன தலைவர், செயலாளர், உறுப்பினர்கள், விளையாட்டுக் கழகங்கள், பொதுமக்கள், நலன்விரும்பிகள் ஆகியோர் இச்சிரமதானத்தின் போது கலந்து கொண்டனர்.



Leave a comment