சவுதி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பேரீத்தம் பழங்கள் விநியோகம்

2013-06-05 16.51.21– பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: சவுதி அரேபியா நாட்டு அரசாங்கத்தினால் இலங்கை முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்பட்ட ஈத்தம் பழங்களை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பள்ளிவாயல்கள் சம்மேளனங்கள் ஊடாக வழங்கிவருகின்றது.

இதற்கமைவாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திற்கு முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பள்ளிவாயல்களுக்கு கொடுக்குமாறு வழங்கப்பட்ட ஈத்தம் பழங்களை காத்தான்குடியிலுள்ள பள்ளிவாயல்களுக்கு வழங்கி வைக்கும் வைபவம் அண்மையில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் எம்.ரீ.காலித் ஜே.பீ தலைமையில் சம்மேளன காரியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சம்மேளன பிரதிநிதிகள், பள்ளிவாயல் நிர்வாகத்தினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது காத்தான்குடியையும் அதனைச்சூழவுள்ள பள்ளிவாயல்களுக்கும் குறித்த ஈத்தம்பழங்கள் விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2013-06-05 16.41.05

2013-06-05 16.51.21

2013-06-05 16.42.16

Published by

Leave a comment