காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் மழைகாலங்களில் வெள்ளநீர் வடிந்தோடுவதற்கான விசேட செயற்திட்டம் ஒன்றினை காத்தான்குடி நகரசபை நடைமுறைப்படுத்தவுள்ளதாக காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தெரிவித்தார்.
மழைகாலங்களில் வெள்ளநீர் வடிந்தோடுவதற்கான விசேட செயற்திட்டம் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் ஒன்று இன்று காத்தான்குடி நகரசபை மண்டபத்தில் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போதே தவிசாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நிரந்தர வடிகாலமைப்புக்கு காத்தான்குடியில் பல்வேறு பாழ்வத்தோடைகள் உள்ளன.ஆனால் அவை பராமரிக்கப்படுவதில்லை.இது தொடர்பாக உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு குறித்த குறைபாடு புதிய செயற்றிட்டத்தினூடாக நிவர்த்தி செய்யப்படும் எனவும் காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் மேலும் தெரிவித்தார்.
இதன்போது காத்தான்குடியில் காணப்படும் கரையோரத்தோனா மற்றும் பெரியதோனா பகுதிகளை நிறந்தர வடிகாலமைப்பு அமைப்பாக மாற்றுவது தொடர்பாகவும் தீர்மானங்கள் பல எடுக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் காத்தான்குடி பிரதேச சபைத் தலைவர் எஸ்.எச்.முஸம்மில், கரையோர பாதூகாப்பு திணைக்கள உத்தியோகத்தர், அனர்த்த சேவைகள் உத்தியோகத்தர், நகரசபை பிரதிநிதிகள், நகரசபை உறுப்பினர்கள், ஊர்ப்பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.




Leave a comment