துபாயில் இடம் பெற்ற இலங்கை முதலீட்டு மாநாடு

IMG_0031_1092x728– ACM. சப்றி

துபாய்: துபாயில் உள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகராலயமும், இலங்கை பங்குச் சந்தையும் சேர்ந்து இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்குமுகமாக துபாயில் கடந்த சனிக்கிழமை (01.06.2013 ) அன்று இந்த மாநாட்டை ஏற்பாடு செய்து இருந்தது.

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கைச் செல்வந்தர்களை பங்குச் சந்தை மற்றும் இலங்கை கம்பனிகளில் முதலீடு செய்ய ஊக்குவிக்கும் வகையில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.

துபாயில் உள்ள இலங்கைக்கான கொன்சல்  ஜெனரல் எம்.எம். அப்துல் ரஹீம்  தலைமையில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் இலங்கையில் இருந்து சென்ற பங்குச்சந்தை மற்றும் நிதித்துறை சார்ந்த பிரமுகர்கள் பிரதான உரை நிகழ்த்தினர்.

சுமார் 100 க்கும் மேற்பட்ட துபாயில் வசிக்கும்  இலங்கை வர்த்தகர்கள் மற்றும் வங்கி, நிதித்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் இந்நிகழ்வில்  கலந்து கொண்டனர். இலங்கையில் பயங்கரவாதம் முடிவுற்று 4 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இலங்கைக்கான வெளிநாட்டு  முதலீட்டை மேலும் ஊக்குவிக்குமுகமாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

IMG_0147_1092x728

IMG_9840_1092x728

IMG_0031_1092x728

Published by

Leave a comment