சீனா மற்றும் தெற்காசிய நாடுகள் பங்கு கொள்ளும் 5 நாள் வர்த்தக கண்காட்சி

P1100397– சீனாவின் குண்மிங்கிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா

குன்மிங்: சீனா மற்றும் தெற்காசிய நாடுகள் பங்கு கொள்ளும் 5 நாள் வர்த்தக கண்காட்சி நிகழ்வுகள், வியாழக்கிழமை உத்தியோக பூர்வமாக சீனாவின் குன்மிங் பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தெற்காசிய நாடுகளையும், சார்க் வலயத்தினையும் பிரதி நிதித்துவப்படுத்தும் நாடுகளி்ன் ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள், அமைச்சர்கள் இதன் போது கலந்து கொண்டு ஆரம்ப வைபவ நிகழ்வினை சிறப்பித்தனர்.

சீனா,இலங்கை,மலேசியா,நேர்பாளம்,லாவூஸ்,வியட்நாம், தாய்லாந்து பங்களாதேஷ்,கம்போடியா,மியன்மார்,பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதி நிதிகள் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.

ஆரம்ப நிகழ்வினையடுத்து இலங்கையின் கண்காட்சி மற்றும் விற்பனை கூடத்தின் வைபவ ஆரம்ப நிகழ்வினை இலங்கைக் குழுவிற்கு தலைமை தாங்கி வருகைத் தந்திருந்த பிரமர் த.மு..ஜயரத்ன திறந்து வைத்தார்.இந்த நிகழ்வில் இலங்கை கைத்தொழில், வணிகத் துறை அமைச்சின் செயலாளர் அநுர சிறிவர்தன, ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பதில் தலைவர் டாக்டர் யூசுப்..கே.மரைக்கார், வர்த்தக திணைகளத்தின் தலைவர் பி.டி.பெர்ணான்டோ, மற்றும் பிரதமரின் செயலாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்த சினாவின் யூனான் பிராந்திய ஆளுநர். கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனை அமைச்சில் சந்தித்து குண்மிங் கண்காட்சி வளாகத்தில் இலங்கையின் அதிகமான காட்சி கூடங்களை ஏற்படுத்த உதவுமாறு வேண்டுகோளினை முன் வைத்திருந்தார்.

அதனடிப்படையில் ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்கு வழங்கிய பணிப்பின் பேரில் அதிகமான காட்சி கூடங்கள் இங்கு ஏற்படுத்தப்பட்டிருந்தன.

இலங்கை கண்காட்சி கூடத்தில் 130 க்கும் மேற்பட்ட உற்பத்தி பொருட்களை கொண்ட காட்சி கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக தேயிலை, வாசனை திரவியம், மாணிக்க கற்களால் ஆன ஆபரணங்கள், ஆடை, மற்றும் கலை வடிவமைப்புக்கள் என்பன முக்கிய இடத்தை பெற்றுள்ளன.

எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இந்த கண்காட்சி குண்மிங் சதுக்கத்தில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

P1100402

P1100397

P1100439

P1100445

Published by

Leave a comment