சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பாலஸ்தீனம் சென்ற அமைச்சர் ஹக்கீம், அவசரமாக நாடு திரும்பினார்

hakeemகொழும்பு: பாலஸ்தீனத்தில் நடைபெறுகின்ற சர்வதேச ஸ்லாமிய மாநாட்டில் கலந்துக் கொள்ளச் சென்றிருந்த அமைச்சர் ரவுப் ஹக்கீம் அவசரமாக நாடு திரும்பியுள்ளார். அவரது ஊடக செயலாளர் ஹபீஸ் இதனை உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்தார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர் உடனடியாக நாடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது. மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை குறைப்பது தொடர்பில் இன்று அமச்சரவைக் கூட்டத்தில் பேசப்படவுள்ளது.

அத்துடன் உத்தேச அரசியல் யாப்ப்பில் காணப்படுகின்ற மாகாண அதிகார குறைப்புகள் தொடர்பான பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது. இவற்றில் கலந்து கொள்ளும் நோக்கிலேயே அமைச்சர் இலங்கை திரும்பியுள்ளார்.

இதேவேளை இன்று மாலை வடமாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு வாக்களிக்க வாய்ப்பளிப்பதற்கான புதிய ஒழுங்குவிதி தொடர்பில் பாராளுமன்றத்தில் விசேட உரையை நிகழ்த்தவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

-TW

Published by

Leave a comment