கென்ய மக்களுக்கு பிரிட்டன் நட்ட ஈடு

kenyaலண்டன்: பிரிட்டிஷ் படைகளால் 1950களில் சித்ரவதைகளுக்கு உள்ளான ஆயிரக்கணக்கான கென்ய நாட்டு மக்களுக்கு பிரிட்டன் வியாழனன்று நட்டஈடு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தக் காலத்தில் காலனித்துவ ஆட்சியில் இருந்து கென்யாவுக்கு விடுதலை கோரி போராட்டம் நடத்திய ”மௌமௌ” கிளர்ச்சிக்காரர்களுடன் பிரிட்டன் சண்டையிட்டபோது இவை நிகழ்ந்ததாகக் கூறப்படுகின்றது.

பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோரவுள்ள பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் அவர்கள், 20 மில்லியன் டொலர்கள் நட்டஈடும் அறிவிப்பார் என்று  தெரியவந்துள்ளது.

இது குறித்த ஒரு தீர்வுக்கான சமரச பேச்சுக்களை தாம் நடத்துவதாக அண்மையில் ஒரு பிரிட்டிஷ் சட்டநிறுவனம் கூறியிருந்தது. ஐயாயிரத்துக்கும் அதிகமான கென்ய மக்களை இந்த நிறுவனம் பிரதிநிதித்துவம் செய்தது.

-BBC

Published by

Leave a comment