கிண்ணியா: திருகோணமலை மாட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தல் இடம்பெற்றுவரும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் அச்சத்துடன் பீதியுடனும் காணப்படுகின்றனர். இக்கொள்ளைச் சம்பவங்கள் நள்ளிரரவு நேரங்களில் அதிகமாக இடம்பெருகின்றன.
கிண்ணியா பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக வீடுகளில் புகுந்த கொள்ளையர்கள் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள், பணம், மின்சார பொருட்கள் என கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தூங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு ஸ்பிறே மருந்தினை பயன்படுத்தியே இவ்வாரான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
சில தினங்களுக்கு முன் பல இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் முன்னாள் வலயக்கல்வி பணிப்பாளரின் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டதால் தத்தமது வீடுகளில் பெறுமதியான பொருட்களை வைப்பதற்கு மக்கள் அச்சம் கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
சமாதான காலத்திலும் மக்கள் பீதியுடனும் பயத்துடனும் வீடுகளில் இருக்கவேண்டிய நிலை தோன்றியிருப்பதாக மக்கள் கவலை தெரிவிக்கன்றனர். இத்தருணத்தில் பொலிசாரின் பங்கு மிகத்தேவையானதாக இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்கவேண்டுமெனவும் கொள்ளையிடப்பட்ட பொருட்களை மீட்பதற்கும் பொலிசாரிடமும் பொறுப்பு மிக்க அதிகாரிகளிடமும்; கோரிக்கைகளை முன்வைத்திருப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a comment