இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி உப பிராந்தியத்தின் ஏற்பாட்டில் இஜ்திமா நிகழ்வு நாளை

ijthima– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி உப பிராந்தியத்தின் ஏற்பாட்டில் நன்மை செய்யும் சமூகமே வெற்றி பெறும் சமூகம் எனும் தொனிப்பொருளில்  ஆண்கள், பெண்களுக்கான இஜ்திமா நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை ஆரையம்பதி பாலமுனை பிரதேசத்தில் இடம்பெறவுள்ளது.

பெண்களுக்கான நிகழ்வு பாலமுனை அலிகார் வித்தியாலய மண்டபத்தில் நாளை வெள்ளிக்கிழமை பி.ப.4.00 மணி தொடக்கம்.5.30 மணிவரையும் ஆண்களுக்கான நிகழ்வு முஹியித்தீன் ஜூம்மா பள்ளிவாயலில் நாளை வெள்ளிக்கிழமை அஷர் தொழுகை தொடக்கம் இரவு 9.மணி வரையும் நடைபெறும்.

இதில் இணக்கமான வாழ்வு இனிய சுவனம் எனும் தலைப்பில் அஷ்ஷேய்க் எம்.எல்.அப்துல் வாஜித் (இஸ்லாஹி)யும், மனித சமூகத்தின் ஆக்கமும் அழிவும் எனும் தலைப்பில் அஷ்ஷேய்க் எம்.எச்.எம்.உஸைர் (இஸ்லாஹி)யும்,நன்மை செய்யும் சமூகமே வெற்றி பெறும் சமூகம் எனும் தலைப்பில்  இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அமீர்  அல் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜூல் அக்பர் ஆகியார் உரை நிகழ்த்தவுள்ளனர்.

மேற்படி இஜ்திமா நிகழ்வில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி உப பிராந்தியம் வேண்டுகாள் விடுக்கின்றது.

Published by

Leave a comment