மட்டக்களப்பு: ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியின் கீழ் அக்ரெட் (ACTED) நிறுவனத்தினால் இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி, பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவின் பயணாளிகளை பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் ரொபின்சொன் நேரில் சென்று சந்தித்து திட்டம் தொடர்பாக கலந்துரையாடியதுடன் தொழில் முயற்சிகளையும் நேரில் பார்வையிட்டார்.
இவ்விஜயத்தின் போது இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவரின் செயலாளரும்,அக்ரெட் (ACTED) நிறுவனத்தின் சிறிய மற்றும் நடுத்தர தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர் இ.ஹஜேந்திரன் மற்றும் மாவட்ட நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் எச்.எம். தாஜுல் பலாஹ் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

Leave a comment