டாக்கா: இந்தியாவின் ஐ.பி.எல் போன்று, பங்களாதேஸில் நடந்த பி.பி.எல் (BPL) போட்டியில் ‘மெட்ச் பிக்ஸிங்’ செய்து சிக்கிய வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் முகம்மது அஷ்ரபுல் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடுவதிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
தான் செய்த தப்புக்கு கண்ணீர் வடித்து, மன்னிப்புக் கோரி இருந்தார் அஸ்ரப். தப்பு என்றும், தேசத்துரோகம் என்றும் தெரிந்தும், தான் மாட்டிக்கொண்டதன் பின்னர் இத்தகைய சூதாட்டங்களில் ஈடுபடும் வீரர்கள், கண்ணீர் வடிப்பதும், மன்னிப்புக் கோருவதும் அஸாருத்தீன் மற்றும் கபீல் தேவ் ஆகியோரின் காலத்திலிருந்து இன்றுவரை கிரிக்கட் உலகில் நடந்து வருவது கேவலமானதாகும்.
ஏற்கனவே இந்திய கிரிக்கெட் ‘ஸ்பொட் பிக்ஸிங்’ உலகை கலக்கி வரும் நிலையில் தற்போது வங்கதேசத்தை மெட்ச் பிக்ஸிங் புகார்கள் சூறாவளியாக சுற்ற ஆரம்பித்துள்ளன. அஷ்ரபுல் இடை நிறுத்தம் குறித்து வங்கதேச கிரிக்கெட்வாரியத் தலைவர் நஸ்முல் ஹசன் செய்தியாளர்களிடம் பேசுகையில்
“பிபிஎல் போட்டியில் மெட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதை ஊழல் எதிர்ப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவிடம் ஒத்துக் கொண்டுள்ளார் அஷ்ரபுல். எனவே விசாரணை முடிந்து முழு அறிக்கை வெளியாகும் வரை அனைத்து வகையான போட்டிகளிலும் விளையாடுவதற்கு அவருக்குத் தடை விதிக்கப்படுகிறது.இதுகுறித்து அஷ்ரபுல்லிடம் நான் பேசியபோது, அவர் தான் செய்த தவறை ஒத்துக் கொண்டார்” என்றார்.
பிபிஎல் தொடரில் பங்கேற்ற டாக்கா கிளாடியேட்டர்ஸ் மற்றும் சிட்டகாங் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது மெட்ச் பிக்ஸிங் நடந்தது. இதில் அஷ்ரபுல் தொடர்பு கொண்டிருந்தார் என்பது குற்றச்சாட்டாகும். இந்தப் போட்டியில் டாக்கா அணி தோல்வி அடைவதற்காக 12,800 அமெரிக்க டொலர் பணத்தை அஷ்ரபுல் பெற்றார் என்பதும் குற்றச்சாட்டாகும்.
இதற்காக அவருக்கு காசோலை ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. பரிசல் பர்னர்ஸ் அணியுடனான போட்டியின்போதும் பிக்ஸிங்கில் ஈடுபட்டுள்ளார் அஷ்ரபுல். வங்கதேச அணியில் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் அஷ்ரபுல் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2007 முதல் 2009 வரை அவர் வங்கதேச அணியின் தலைவராகவும் இருந்தார். 61 டெஸ்ட் போட்டிகளில் 2,737 ஓட்டங்களை அஷ்ரபுல் எடுத்துள்ளார். இதில் ஆறு சதங்கள் அடஙகும். அதேபோல 177 ஒரு நாள் போட்டிகளில் 3,468 ஓட்டங்களை எடுத்துள்ளார் அஷ்ரபுல். 2012ம் ஆண்டு முதல் வங்கதேசத்தில் பிபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தியாவை ஆட்டம் செய்யவைத்த இச்சூதாட்டக் கும்பள்கள் போன்று வங்கதேசத்திலும் இத்தகைய கும்பள்கள் இருப்பதாகவும் தெரியவருகிறது.
நாளை ஆரம்பமாகும் ஐ.சி.சி. சம்பியன் கிண்ண தொடரருக்கு இங்கிலாந்து இரகசிய பொலிஸார் வீர்ர்களை கண்காணிப்பதுடன், சூதாட்டக் காரர்களையும் இணங்கண்டு பிடிப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
![Ashraful_AP[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/06/ashraful_ap1.jpg?w=150&h=115)
![ashraful-in-nafees-out[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/06/ashraful-in-nafees-out1.jpg?w=411&h=250)
Leave a comment