மும்பை: பொலிவுட் நடிகை ஜியா கான் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பொலிவுட் படங்களில் நடித்து வந்தவர் ஜியா கான் (25). அமெரிக்காவில் 1988-02-20 இல் பிறந்த இவர், பிரிட்டிஸ் சிடிசன்சிப் என்பதுடன் இங்கிலாந்தில் வளர்ந்த அவர் அண்மையில் தான் தனது தாயுடன் மும்பை ஜுஹு பகுதியில் வசிப்பதற்கு வந்திருந்தார்.
கஜினி ஹிந்தி ரீமேக்கில் நயன்தாராவின் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர். அவர் அண்மை காலமாக சொந்த பிரச்சனைகள் காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. படங்களில் நடிக்காமல் இருந்த அவர் தற்போது புதிய வாய்ப்புகளை தேடிக் கொண்டிருந்தாராம்.
இந்நிலையில் அவர் நேற்று இரவு 11 மணிக்கு தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த பொலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூப்பர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது வீட்டில் தற்கொலைக் கடிதம் ஏதும் சிக்கவில்லை. சம்பவம் நடந்தபோது அவரது தாயார் வீட்டில் இருந்துள்ளார். அவர் அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக நிஷப்த் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜியா கானின் தற்கொலை தொடர்பாக அவரது ‘போய் பிரண்ட்’ சூரஜ் பஞ்சோலியிடம் பொலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் நடிகர் ஆதித்ய பஞ்சோலியின் மகன் ஆவார்.
அலி றிஸ்வி கான், மற்றும் ராபியா அமீன் ஆகியோரது புதல்வியான இவர், 2007 இல் இருந்து ஹிந்தித்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். பொலிவூட் அன்றிலிருந்து இன்றுவரை பெரும்பான்மையான முஸ்லிம்களைக் களமாகக் கொண்டமைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஐ.பி.எல. சூதாட்டம், கற்பழிப்பு, சிறுவர் துஸ்பிரயோகம், நடிகைகள் மற்றும் மாணவிகளின் தற்கொலைகள் என்று இந்தியா ஆடிப்போய் இருக்கின்றது.
![jiah-khan01-e1370358441390[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/06/jiah-khan01-e13703584413901.jpg?w=73&h=105)

Leave a comment