கல்குடா அக்குறாணை பாரதி வித்தியாலயத்தின் அடிக்கல் நாட்டுவிழா

kiran (2)– பழுளுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: கல்குடா வலயத்திலுள்ள அக்குறாணை பாரதி வித்தியாலயத்தின் அடிக்கல் நாட்டுவிழா நேற்று செவ்வாய்க்கிழமை பாடசாலையின் அதிபர் எஸ்.சிவனேசராசா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் முதலமைச்சரும், ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும், மாகாண சபை உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன்;, அதிதிகளாக கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம், கல்குடா வலயக் கல்விப் பணிமனையின் அதிகாரிகளும், கிராம உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் பாடசாலையின் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டதுடன்

முன்னாள் முதலமைச்சரும், ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும், மாகாண சபை உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மாணவர்களுக்கு இலவச உபகரணங்களை வழங்கி வைத்தார்.

kiran (2)

kiran (3)

kiran

Published by

Leave a comment