ஐ பி எல் போட்டி முறைகேடுகளில் தாவூத் இப்ராஹிமுக்கும் தொடர்பு

dawood_ibrahim_350_100311093511[1]டெல்லி: இந்தியாவில் ஐ பி எல் போட்டிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விவகாரங்கள் இப்போது எல்லைகளைக் கடந்த ஒன்றாக விரிவடைந்து வருவது போலத் தோன்றுகிறது.

இப்போட்டிகளின் போது முறைகேடுகளில் ஈடுபட்டதான குற்றச்சாட்டில் இப்போது வெளிநாட்டில் வாழ்ந்து வரும் நிழல் உலகில் நடைபெறும் பல குற்றங்களுடன் தொடர்புடையவர் என்று கருதப்படும் தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது கூட்டாளி சோட்டா ஷக்கீலையும் இணைக் குற்றவாளிகளாக டெல்லி போலீசார் அறிவித்துள்ளனர்.

மராட்டிய மாநிலத்தில், மிகக் கடுமையான தண்டனைகளைக் கொண்ட, ‘ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்படும் குற்றங்கள் தடுப்புச் சட்டத்தின்’ கீழ் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்தியாவின் ஐ பி எல் போட்டிகளை சூதாட்ட கும்பல்களைக் கொண்டு கட்டுப்படுத்தி, அதன்மூலம் சட்டவிரோதமான வகையில் பணப்பரிமாற்றங்கள் செய்து போட்டியில் முறைகேடுகளை புகுத்தினார்கள் என்கிற ஆகியக் குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது பதியப்பட்டுள்ளன.

dawood ibrahim
தாவூத் இப்றாஹீம்

இதே சட்டத்தின் கீழ் இந்திய அணிக்காக விளையாடிய ஸ்ரீசாந்த் உட்பட ஐ பி எல் போட்டிகளில் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக கூறப்படும் 26 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரின் நீதிமன்றக் காவலும் இம்மாதம் 18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு பிணை கிடைப்பதும் சிரமமானதகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

எனினும் ஐ பி எல் போட்டிகளின் போது முறைகேடான நடவடிக்கையில் ஈடுபட்டதான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள குருநாத் மெய்யப்பன் மற்றும் விந்து தாராசிங் ஆகியோருக்கு நீதிமன்றம் ஒன்று பிணை வழங்கியுள்ளது.

இதனிடையே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில், விளையாட்டு அபிவிருத்திக்கான பொது மேலாளராக இருக்கும் பேராசிரியர் ரத்னாகர் ஷெட்டி 2018 ஆம் ஆண்டு வரை மும்பை கிரிக்கெட் சங்கத்தின் எந்த செயலபாட்டிலும் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளார்.

Published by

Leave a comment