காத்தான்குடி: தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அனுசரணையில் இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் ஒருங்கிணைப்பின் கீழ் நாடளாவிய ரீதியிலுள்ள சகல பிரதேச செயலக இளைஞர் சம்மேளனத்தினாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டத்திற்கமைய ‘யூத் 13 பிளஸ்’ வேலைத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கான அறிவூட்டல் நிகழ்வு இன்று காத்தான்குடிப் பிரதேச பிரிவிட்குட்பட்ட ஜன்னத் பள்ளிவாயலில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் காத்தான்குடிப் பிரதேச செயலக இளைஞர் உத்தியோகத்தர் றம்ஸி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் காத்தான்குடிப் பிரதேச செயலாளர் எஸ்.எச். முஸம்மில், முன்னாள் கிழக்கு மாகாண சபையை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், இளைஞர் பாராளுமன்றத்திற்கு காத்தான்குடியில் தெரிவு செய்யப்பட்ட குபா இளைஞர் கழக உறுப்பினர் சுஜாத் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது வாலிபர்கள், இளைஞர்கள் குறித்த இளைஞர் கழகத்திற்கு உள்வாங்கப்படுவதனால் கிடைக்கப் பெறக் கூடிய பயன்கள், மேலும் எண்ணிலடங்காத சேவைகள்,அவர்களுடைய செயற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




Leave a comment