கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் ரொபின்சொன் விஜயம்

YOURKATTANKUDY.COM
YOURKATTANKUDY.COM

பழுலுல்லாஹ் பர்ஹான்

வந்தாறுமூலை: மட்டக்களப்புக்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் ரொபின்சொன் இன்று காலை கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்து வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பில் உபவேந்தர் கலாநிதி கிட்னன் கோவிந்தராஜா, பதிவாளர் கே. மகேசன், மற்றும் பீடாதிபதிகளும் கலந்து கொண்டனர்.

சந்திப்புக் குறித்துக் கருத்துத் தெரிவித்த உபவேந்தர் கலாநிதி கிட்னன் கோவிந்தராஜா கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், எதிர்கால வேலைத்திட்டங்கள், அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடினார். அத்துடன் கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சமூகத்திற்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்வது குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

அதே நேரம், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மூன்று இன மாணவர்களையும் சந்தித்து அவர்களது பிரச்சினைகள், தேவைகள் பற்றியும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் ரொபின்சொன் அம்மையார் கேட்டறிந்து கொண்டார்.

மாணவர்கள், போக்குவரத்துப்பிரச்சினைகள் மற்றும் தங்களது பல்கலைக்கழகத் தேவைகள் குறித்து தூதுவருடன் பகிர்ந்து கொண்டனர். 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment