அமைச்சர் ஹாபிஸ் நசீர் நகரபிதா ஹில்மி விசேட சந்திப்பு

WWW.YOURKATTANKUDY.COM
WWW.YOURKATTANKUDY.COM

ரைஸ்

கிண்ணியா: கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி அபிவிருத்தி கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் நடமாடும் சேவைகளின் போது மாவட்டத்தின் பல இடங்களுக்கும் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் நேரில் சென்று பார்வையிட்டார். இதன் போது கிண்ணியா நகரசபைக்கும் வருகை தந்திருந்த போது கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் எம். எம். ஹில்மி சட்டத்தரணியை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் போது நகரசபை எல்லைக்குள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய விடயங்கள் சம்பந்தமாகவும், மட்டக்களப்பு தோனா வீதியில் அமைந்திருக்கும் சிறுவர் பூங்காவிற்கான பெண்கள் ஓய்வறை அமைப்பு சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.

WWW.YOURKATTANKUDY.COM
WWW.YOURKATTANKUDY.COM

இதன்போது வருகை தந்திருந்த கிண்ணியா ஜம்இயதுல் உலமா சபை மற்றும் கிண்ணியா சுமையா அறபுக்கல்லூரி ஆகியவற்றின் குறைபாடுகளையும் அமைச்சர் கேட்டறிந்ததோடு அதற்கான உதவிகளையும் வழங்குவதாக தெரிவித்தார். இங்கு உரையாற்றிய கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் கிண்ணியா நகரசபை நகரபிதா தலைமையில் ஏற்பாடு செய்த இந்த சந்திப்பு அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க இடம்பெற்றது. 

WWW.YOURKATTANKUDY.COM
WWW.YOURKATTANKUDY.COM

கிண்ணியா பிரதேசமானது உல்லாச பிரயாணிகள் அதிகம் வருகின்ற இடமாக காணப்படுவதனால் இப்பிரதேசத்தை அழகுபடுத்த இவர்கள் எடுத்திருக்கும் முயற்சிக்கு உடனடித் தீர்வை பெற்றுக் கொடுக்க முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவித்தார். நிகழ்வின் போது அமைச்சரின் செயலாளர் உட்பட அமைச்சு சார்ந்த அதிகாரிகளும் திணைக்கள அதிகாரிகளம் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment