சவூதி அரேபியாவில் “சார்ஸ்” மர்ம நோய்: 24 பேர் பலி!

saudi-arabia-sars[1]
BY: MJ

-MJ

ரியாத்: சவூதி அரேபியாவில் சுவாசக் குழாயை தாக்கும் புதிய வைரஸ் நோய் தாக்குதலுக்கு இதுவரை 21 பேர் உயிரிழந்து இருந்தனர். “சார்ஸ்” (SARS-Related Virus) SARS: Severe acute respiratory syndrome நோய் சம்பந்தப்பட்ட இந்த சுவாசத்தை பாதிக்கும் வைரஸ்கள் (மெர்ஸ்) எம்.இ.ஆர்.எஸ்.என்றழைக்கப்படுகிறது.

இதுவரையில் இந்நோய் காரணமாக 80 பேர்வரை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக சவூதி அரேபிய சுகாதார அமைச்சு, உறுதிசெய்திருக்கின்றது. இந்நோய் சுவாசத்துடன் சம்பந்தப்பட்டதாக இருப்பதால், மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களுக்கு செல்லும் போது முகமூடி (Mask) அணிந்துகொள்ளுமாறும் பொதுமக்கள் கேட்கப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த வைரஸ் நோய்க்கு மேலும் 3 பேர் உயிரிழந்து இருப்பதாக இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் இறப்பு எண்ணிக்கை 24 ஆக உயர்வு அடைந்து இருக்கிறது. நீண்ட நாட்களாக நீடித்து வரும் இந்த சார்ஸ் சம்பந்தப்பட்ட நோய்க்கு அங்கு 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இத்தகைய சார்ஸ் வைரஸ்  தென் சீனாவில் 2003ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர், உலகில் ஆங்காங்கே பரவி வந்தது. குடும்பங்களில் இருந்து பொதுவாக பரவும் இந்நோய் அன்று உலகளவில் 8,500 பேர்வரை இந்நோயால் பாதிக்கப்பட்டிருந்ததுடன்,  இந்நோய் 800 மக்களை பலியெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது!

saudi-arabia-sars[1]

sars[1]

Published by

Leave a comment