கொழும்பு: அரச முகாமைத்துவ உதவியாளர் (Management Assistant) தரம் iii க்காக நடத்தப்பட்ட திறந்த போட்டிப்பரீட்சையின் பெறுபேறுகள் தற்சமயம் வெளியாகியுள்ளன.
இந்த பரீட்சைக்கு தோற்றியவர்களில் 17,301 பேர் சித்திடைந்துள்ளதாகவும் அவர்களின் பெயர் பட்டியல் பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்தார்.
இதன்படி, இந்த பரீட்சைக்குத் தோற்றியவர்கள் பொது நிர்வாக அமைச்சினூடாக தமது பேறுபேறுகளை தெரிந்து கொள்ள முடியுமெனவும் பரீட்சை ஆணையாளர் மேலும்; தெரிவித்தார்.
-GA
Leave a comment