மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலைக்கும் திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கட் போட்டியில் திருகோணமலை கேணேஸ்வரா இந்துக்கல்லூரி சம்பியன்

Yourkattankudy
BY: FM. Farhan

பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: கிழக்கின் பொன் சமர் என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலைக்கும் திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கட் போட்டியில் திருகோணமலை கேணேஸ்வரா இந்துக்கல்லூரி சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது. நான்காவது தடவையாக இடம்பெற்ற இந்த த பெட்டில் ஒப் எவரெஸ்ட் (சிகரத்தினை நோக்கியதான) போட்டி கடந்த வியாழக்கிழமை காலை கோலாகலமாக ஆரம்பமானது.

50ஓவர் கொண்ட சுற்றுப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு சிவானந்தா அணி முதலில் துடுப்பெடுத்தாடி 37.4 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றது.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய திருகோணமலை கோணேஸ்வரா அணியினர் சிறப்பாக விளையாடி ஆறு விக்கட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைப்பெற்று சம்பியன் கிண்ணத்தை சுவிகரித்துக்கொண்டது.

இந்த போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக மட். சிவானந்தா தேசிய பாடசாலையை சேர்ந்த அனுஜன் (87ஓட்டங்கள்,சிறந்த களத்தடுப்பாளராக மட். சிவானந்தா தேசிய பாடசாலையை சேர்ந்த ஜி.சுதர்ஷனும்,சிறந்த பந்துவீச்சாளராகவும் சிறந்த ஆட்ட நாயகனாகவும் திரு.கோணேஸ்வரா இந்துக்கல்லூரியை சேர்ந்த என். தர்சிகனும் (28-4) தெரிவுசெய்யப்பட்டனர்.

இறுதி நிகழ்வானது மட்.சிவானந்தா தேசிய பாடசாலை அதிபர் மனோராஜ் தலைமையில் மட்.சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றபோது நிகழ்வின் விசேட அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலய கல்விப்பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ரணசிங்க வவுணதீவு பிரதேச செயலாளர் தவராசாவும் கௌரவ அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலய உதவி உடற்கல்வி பணிப்பாளர் லவகுமார் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது வெற்றிபெற்றவர்களுக்கா பரிசுகள் வழங்கப்பட்டதுடன் சம்பியன் கிண்ணம் வென்ற கோணேஸ்வரா இந்துக்கல்லூரிக்கு வெற்றிக்கிண்ணம் வழங்கிவைக்கப்பட்டது.

கடந்த இரண்டு மூன்று ஆண்டுகள் சிவானந்தா தேசிய பாடசாலை சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment