சமுர்த்தி அதிகாரிகளின் சேவைகள் பணத்துக்காக அல்லாமல் மனித நேயத்துக்காக இருக்க வேண்டும் – ஹூனைஸ் பாருக்

hunaisஇர்ஷாத் றஹ்மத்துல்லா

மன்னார்: சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளின் சேவைகள் பணத்துக்காக அல்லாமல் மனித நேயத்துக்காக இருக்க வேண்டும் என்று வன்னி மாவட்ட ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் மன்னார் தாராபுரம் அல்-மினா மஹா வித்தியாலயத்தில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பிரதேச செயலகப் பரிவில் உள்ள கிராம அதிகாரி பிரிவில் பணியாற்றவென தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளுக்காக நியமனம் வழங்கும் நிகழ்வின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர, முசலி பிரதேச சபை தலைவர் தேசமான்ற யஹ்யான், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், மன்னார் நகர சபை உறுப்பினர் நவ்சீன் மற்றும் அமைச்சின் செயலாளர்கள், சமுர்த்தி அதிகார சபை பணிப்பாளர் நாயகம் பந்துல உட்பட பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வி்ல் மேலும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் உரையாற்றும் போது, 

சமுர்த்தி திட்டம் வறுமையினை ஒழிக்கும் ஒன்றாகவே அறிமுகப் படுத்தப்பட்டிரக்கின்றது.அதனது நம்பகத்தன்மையினை மக்கள் மத்தியல் எடுத்துச் செல்வது தான் அதிகாரிகளின் பொறுப்பாகும். இந்த நியமனத்தை பெற்றுத்தருவதற்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் முன்னெடுத்த முன்னெடுப்புக்கள் வரலாற்றில் ஒரு பதிவாக நிச்சயமாக இருக்கும்.

அதே போல் ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கத்திற்கு விசுவாசமாக இதிகாரிகள் இருப்பதன் மூலம் தான் தாம் இழந்து போன அந்த அபிவிருத்திகளை மீண்டும் இம் மண்ணுக்கு கொண்டுவர முடியும். என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

Published by

Leave a comment