தெஹ்ரான்: ஈரான் ஜனாதிபதி முகமது அஹமதி நிஜாத் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக இருந்து வருகின்ற நிலையில் அங்கு இந்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. ஜனாதிபதி அஹமதி நிஜாத்தும், அவரது அதிகாரிகள் குழுவும் மசாந்தரானில் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகள் மற்றும் குகைப் பாதையை திறந்து வைக்க ஹெலிகொப்டரில் சென்றனர்.
வடக்கு மலைப்பாதை வழியாக ஹெலிகொப்டர் சென்றபோது திடீரென கோளாறு ஏற்பட்டதாக விமானி கூறியுள்ளார். இதனையடுத்து விமானி, ஹெலிகொப்டரை அந்த மலைப் பகுதியிலேயே அவசரமாக தரையிறக்கினார்.அவரின் சதூரியத்தால் ஈரான் ஜனாதிபதி அஹமது நிஜாத்தும், அவரது அதிகாரிகள் குழுவும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர் என்று கூறப்படுகின்றது.
இச்சம்பவத்தையடுத்து, பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு ஜனாதிபதி கார் மூலம் தலைநகர் தெஹ்ரான் திரும்பினார்.
-LS
![helicopter_iran_002[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/06/helicopter_iran_0021.jpg?w=460&h=344)
Leave a comment