கண்டி – கொழும்பு கடுகதி அதி சொகுசு ரயில் சேவை!

dscn0268[1]கொழும்பு: ஜூன் மாதம் 3 ஆம் திகதி முதல் கொழும்புக்கும் கண்டிக்கும் இடையில் அதிசொகுசு கடுகதி ரயில் சேவையொன்று ஆரம்பித்துவைக்கப்படவிருப்பதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் குமார் வெல்கம தெரிவித்தார்.

1864 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக கண்டிக்கும்- கொழும்புக்கும் இடையில் அதிசொகுசு ரயில் சேவை ஆரம்பிக்கப்படவிருப்பதாக அமைச்சர் கூறினார்.

இந்த அதிசொகுசு ரயிலின் 10 பெட்டிகளில் 44 இருக் கைகள் இருக்கும் என்றும்- ஒரு வழிப்போக்குவரத்துக்கு ஒருவரிடம் தலா 500 ரூபா அறவிடப்படும் என்று ரயில்வே திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

குறித்த சொகுசு ரயில் வண்டி வாரத்துக்கு ஒருநாள் மாத்திரமே பயணத்தை மேற்கொள்ளும் என்றும்- இது ராகம- கம்பஹா- பேராதனை ஆகிய ரயில் நிலையங்களில் மாத்திரமே தரித்து நிற்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

-GA

Published by

Leave a comment