காத்தான்குடி: இலங்கை பொலிஸ் திணைக்களத்தினாள் ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திற்கும் புதிதாக ஒவ்வொரு பொலிஸ் ஜீப் வண்டி வீதம் வழங்கப்பட்டுள்ளது.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் ஜீப் வண்டியில் சிங்களம், தமிழ்-ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் தமிழ், சிங்கள மொழிகள் பிழையாக எழுதப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தமிழ் மொழியில் காத்தான்குடிக்கு – ‘காத்தாங்குடி’ என்றும் சிங்கள் மொழியில் காத்தான்குடிக்கு ‘காத்தங்குடி’ என்றும் எழுதப்பட்டு தமிழ்-சிங்கள் மொழிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை பொலிஸ் திணைக்களம் திறுத்த வேண்டும் எனவும் பொது மக்கள் வேண்டுகொள் விடுக்கின்றனர்.


Leave a comment