அக்குழு மேற்பார்வை செய்து தனக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் இதற்கமைய தரமற்ற வீதிகளை நிர்மாணித்த ஒப்பந்தக்காரர்களின் கொடுப்பனவுகளை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் தெரிவித்தார்.மூதூர் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றஅபிவிருத்தி ஒழுங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில் :- திருகோணமலை மாவட்டத்திலுள்ள 11 பிரதேச செயலகத்தில் மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல பிரதேசங்கள் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன. தற்போது அப்பிரதேசங்களின்
உட்கட்டமைப்பு மற்றும் பெளதிக வளங்களை மேம்படுத்த கிழக்கு மாகாண சபையினூடாக கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியினூடாக மூதூர் கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பல செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற மூவின மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப மூன்று மாவட்டங்களின் அரச அதிபர்களின் ஒத்துழைப்புடன் ஜெய்கா, என்டிர்ப், மற்றும் ஏ. டீ. பீ ஆகிய நிறுவனங்களின் நிதியின் மூலம் வீதிகள், பாலங்கள், குளங்கள் வாய்க்கால்களை புனர் நிர்மாணம் செய்ய பல கோடி ரூபாக்களை இவ்வருடம் ஒதுக்கீடு செய்துள்ளோம் என்றும் முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் தெரிவித்தார்.

Leave a comment