காத்தான்குடி: காத்தான்குடியில் ஆற்றில் இன்று வியாழக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரைக் காணவில்லையென காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று வியாழக்கிழமை ஆற்றிற்கு 249ம் இலக்க தோணியில் சென்ற அடையாளப்படுத்தப்படாத ஒருவரையே இதுவரையில் காணவில்லை எனவும் அவர் சென்ற குறித்த தோணி காத்தான்குடி-05 ஆற்றங்கரை வாவிக்கரையில் கரை ஒதுங்கியுள்ளதாகவும் குறித்த நேரத்தில் மழைத்துளியுடனான சுழல் காற்று வீசியதாகவும் காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் காத்தான்குடி-05 பகுதியைச் சேர்ந்த நீண்டகால மீனவரான அப்துல் ஹமீத்திடம் கேட்ட போது
இன்று வியாழக்கிழமை பிற்பகல் 04.15 மணயிளவில் வழமை போன்று நான் ஆற்றிற்கு மீன்பிடிக்கச் சென்றேன் .சுமார் 04.50 மணியளவில் கடுமையான சுழல் காற்று வீசியது. ஆற்றின் நடுப்பகுதியையும் தாண்டி நான் இருந்தேன்.அப்போது ஒருவர் தோணியொன்றில் நிற்பதைக் கண்டேன் .நான் காற்றிற்கு மத்தியிலும் இறைவனின் உதவியால் கரைக்கு வந்து சேர்ந்தேன். ஆனால் அவரைக் காணவில்லை. அவருடைய தோணி மாத்திரம் கரையொதுங்கியதாக அவர் தெரிவித்தார்.
தோணி கரையொதுங்கிய இடத்திற்கு காத்தான்குடிப் பொலிஸார் வருகை தந்துள்ளதுடன் காணாமல் போனவரை மீனவர்கள் தேடி வருகின்றனர்.





Leave a comment