காலி: சிங்கள பௌத்த தேரர்களைக் கொண்ட இனவாத அமைப்பான பொதுபல சேனாவினால் காலி – வங்சாவல பகுதியில் நடத்திச் செல்லப்பட்ட ‘மெத் செவன’ எனப்படும் சமயரீதியான மத்திய நிலையத்திலிருந்து அகன்று செல்லுமாறு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.காலி மேலதிக நீதிமன்ற நீதிவான் குணேந்திர முணசிங்க முன்னிலையில் நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மெத் செவன மத்திய நிலையம் நடத்திச் செல்லப்பட்ட காணிக்கும், கட்டிடத்திற்கும் உரிமை கோரும் ஒருவர் இதற்கு முன்னர் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை தாக்கல் செய்த டி.ஜி.அசங்க அமரசிறி என்பவர், தமது காணியை பொதுபல சேனா அமைப்பினர் பலவந்தமாக அபகரித்து பயன்பெற்று வருவதாக முறையிட்டுள்ளார்.
இந்த வழக்கில் பிரதிவாதிகளாக, பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட மெத் செவனயில் பணிபுரிந்து வந்த 4 பேர் சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர்.
-TW
Leave a comment