இலங்கையில் இடம்பெறும் பொருளாதார வளர்ச்சியுடன் உணவு உற்பத்தியிலும் குறிப்பாக நெல் உற்பத்தியிலும் நாடு தன்னிறைவை அடைந்திருப்பதனால் எமது நாட்டில் அனைவருக்கும் மூன்று வேளை உணவு திருப்திகரமான முறையில் கிடைக்கின்றது.
ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வின்றி அனைவருக்கும் நாளாந்தம் உணவு கிடைக்கின்றது. இதனால் இன்று எமது நாட்டிலுள்ள பாடசாலைப் பிள்ளைகளும், பெண்களும் அவர்களின் வயதுக்குரிய எடையை விட கூடுதலான எடையைக் கொண்டிருக்கிறார்கள். பாடசாலைப் பிள்ளைகளின் எடை 15 சதவீதமும், பெண்களின் எடை 22 சதவீதமும் அதிகரித்துள்ளது.
உடல் எடை அதிகரிப்பும் போஷாக்குணவை அதிகமாக உட்கொள்வதும் தொற்றா நோய்கள் நாட்டில் அதிகரிப்பதற்கு பிரதான காரண மாக அமைந்திருக்கிறதென்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித்த மஹிபால தெரிவித்துள்ளார். இவ்விதம் தொற்றா நோய்கள் நம் நாட்டு மக்களுக்கு அதிகமாக ஏற்படுவதற்கு அவர்கள் அளவுக்கதிகமான சீனியையும், உப்பையும் உணவில் சேர்த்துக் கொள்வதே பிரதான காரணமென்று அவர் கூறுகின்றார்.
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் தற்போது ‘பாஸ்ட் புட்’ என்று அழைக்கப்படும் கட்லட், பெட்டிஷ், பிட்ஸா, கொத்து ரொட்டி போன்றவற்றை மக்கள் சாப்பிடவில்லை. அன்று அவர்கள் மரத்திலிருந்து பிடுங்கப்பட்ட புதிய பழவர்க்கங்களையும், காய்கறிகளையும் உட்கொண்டார்கள். அதனால், அன்றைய எமது மூதாதையரை தொற்றுநோய்களோ, தொற்றா நோய்களோ தாக்கவில்லை.
உணவு அருந்துவது பற்றி பல மூட நம்பிக்கைகள் இருக்கின்றன. எமது நாட்டிலுள்ள பல இளம் பெண்கள் உணவை கட்டுப்படுத்துகிறோம் என்று கூறிக்கொண்டு போஷாக்குணவை உட்கொள்வதையும் தவிர்த்துக் கொண்டு சதையில்லாத கட்டான உடலமைப்பை பெற்றுக் கொள்ள விரும்புகிறார்கள். தங்கள் உடலை அழகாக வைத்திருப்பதற்காக இந்தப் பெண்கள் போஷாக்கு உணவை உட்கொள்ளாமல் உடலுக்கு தீங்கிழைப்பதனால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எடை குறைவுடன் பிறக்கின்றன.
இலங்கை போன்ற நாட்டில் மக்கள் எவ்விதம் போஷாக்குணவை தேர் ந்தெடுத்து உட்கொள்ள வேண்டுமென்பதை அறிந்திருக்க வேண் டும். அத்துடன் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மார் முதல் 6 மாதங்களுக்காவது தாய்ப்பாலை கொடுப்பது அவசியமா கும். பின்னர் குழந்தைகளுக்கு மற்ற உணவுகளுடன் அவ்வப்போது தாய்ப்பாலை கொடுப்பது நல்லது. சார்க் பிராந்திய நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இலங்கையில் குழந்தைகளுக்கு தாய்ப் பால் கொடுக்கும் பழக்கம் அதிகமாக இருக்கின்றது.
ஒரு குழந்தையின் வாழ்க்கையில் முதல் 1000 நாட்கள் முக்கியத்துவம் பெறுகின்றது. இக்காலப்பகுதியில் குழந்தைகளுக்கு சகல விதமான இயற்கையான போஷாக்குணவை பெற்றுக் கொடுப்பது மிகவும் அவசியம். இந்தக் காலப்பகுதியில் நல்ல உணவை குழந்தைகளுக்கு கொடுக்காமல் குழந்தைகள் இரண்டு வயதை கடந்த பின்னர் அவர் களுக்கு எவ்வளவுதான் போஷாக்குணவை கொடுத்தாலும் அத னால் நன்மை ஏற்படப் போவதில்லை.
இதனால், ஒரு குழந்தையின் முதல் 1000 நாட்களின் போது போஷாக் குணவு கொடுக்கப்படாவிட்டால் அந்தக் குழந்தை வாழ்நாள் பூரா வும் பலவீனமான, நோய்கள் இலகுவில் ஏற்படக்கூடிய பலவீன மான உடலமைப்பைக் கொண்டிருக்கும். இதனால்தான் இலங்கை யில் மட்டுமல்ல, பொருளாதார ரீதியில் நல்ல முன்னேற்றம் கண்டு ள்ள செல்வந்த நாடுகளிலும் தாய்மார் தங்கள் பிள்ளைகளுக்கு தாய் ப்பால் ஊட்டுவது அவசியம் என்ற கருத்து நவீன வைத்தியத் துறையில் வலியுறுத்தப்படுகிறது.
இக்காரணத்திற்காக முன்னர் குழந்தை பிறந்து 6 வாரங்களுக்குள் வேலைக்கு செல்லும் மேற்கத்திய நாடுகளின் சீமாட்டிகள் இப்போது 6 மாதங்களுக்கு லீவு எடுத்து தங்கள் பிள்ளைகளை தாய்ப்பால் ஊட்டியும், ஏனைய நேரடி கவனிப்புகளைக் கொடுத்தும் வளர்க்கி றார்கள்.
வறுமையும், பசிப்பிணியும், பட்டினியும் தாண்டவமாடும் ஆபிரிக்க நாடு களிலும் சில இலத்தின் அமெரிக்க நாடுகளிலும் இன்று சிசு மரணம் அதிகரித்திருப்பதற்கு போஷாக்குணவு குழந்தைகளுக்கு கொடுக்கப் படாததே பிரதான காரணமாகும். ஆபிரிக்க நாடுகளில் வறுமை தாண்டவமாடும் கிராமப் பகுதிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிரசவித்த ஓரிரு தினங்களுக்கு மாத்திரமே அக்குழந்தைகளின் தாய்மாருக்கு தாய்ப்பால் சுரக்கும் என்றும் அதற்கு பின்னர் பாலை உற்பத்தி செய்யக்கூடிய வகையில் அந்தப் பெண்களின் உடல் ஆரோக்கியமாக இருக்கவில்லை என்றும் வைத்தியர்கள் கூறுகிறா ர்கள்.
இதனால், அந்நாடுகளில் பிறக்கும் குழந்தைகளில் 85 சதவீதமானோர் முதல் 6 மாதங்களுக்குள் மரணிக்கிறார்கள். அதுபோன்று தாய்மா ரும் குடிப்பதற்கு நீரின்றி தாகத்தினாலும், பட்டினி கிடந்தும் பிரச வம் முடிவடைந்து ஓரிரு மாதங்களில் பட்டினியினால் மரணிக்கும் வேதனைக்குரிய சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
மேற்கத்திய நாடுகளின் பெண்கள் மட்டுமல்ல, நம்நாட்டில் உள்ள செல்வ செருக்கோடு வாழும் பெண்களும் தங்கள் உடல்கட்டமை ப்பை அழகாக வைத்து கவர்ச்சிகரமான தோற்றத்தை கொண்டிருக்க வேண்டுமென்பதற்காக தாங்கள் குழந்தையை பிரசவித்து 10 நாட்கள் அல்லது இரு வாரங்களுடன் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட் டுவதை நிறுத்திவிடுகிறார்கள். உடலில் பால் சுரப்பதை தடுப்பதற் கும் அவர்கள் ஊசி மருந்தை போடுவதனால் அதன் பக்கவிளைவு கள் பெண்களின் மார்பகத்தில் புற்றுநோயை ஏற்படுத்தும் அளவு க்கு பாரதூரமாக அமைந்துள்ளது.
இவ்விதம் பிறந்த 6 மாதங்கள் வரை தாய்ப்பாலை குடிக்கமுடியாத குழ ந்தைகளின் மூளை வளர்ச்சியும், உடல் வளர்ச்சியும் மங்கிப் போய் சில சந்தர்ப்பங்களில் அவர்கள் வாழ்நாள் முழுவதும் மூளை வள ர்ச்சியற்றவர்களாகவே இருந்து துன்பம் அனுபவிக்க வேண்டுமெ ன்று வைத்தியர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.
எனவே, தாய்ப்பாலின் மகத்துவத்தை உணர்ந்து அனைவரும் தங்கள் பிள்ளைகளுக்கு தாய்ப்பாலை ஊட்டுவது அவசியமாகும்.
-தினகரன்
Leave a comment