பீஜிங்: தற்போது நடைமுறையில் உள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்கு மேலும் நிதி வழங்கும் முகமாகவும் புதிய அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்கும் நோக்கிலும் பல ஒப்பந்தங்கள் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டன.
அத்தனகல்ல- மினுவன்கொட மற்றும் குருநாகல் ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகத் திட்டங்களை நடைமுறைப்படுத்தல்-
கண்டியில் சர்வதேச மநாட்டு மண்டபமும் அநுராதபுரத்தில் கலையரங்கும் அமைத்தல்-
கொழும்பு ராகமை ஆஸ்பத்திரிகளில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளல்-
யாழ்ப்பாணம்- கொழும்பு அதிவேக பாதை தவிர மேலும் வடமாகாணத்தில் புகையிரத பாதை நீடிப்புகளுக்கும் நிதி உதவி வழங்குதல்-
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை மாத்தறையில் இருந்து கதிர்காமம் வரையில் விஸ்தரித்தல்-
கொழும்பு – கண்டி- குருணாகலை மாவட்டங்களுக்கு இடையில் புதிய அதிவேக நெடுஞ்சாலை ஒன்றை நிர்மாணித்தல் என்பன இந்த ஒப்பந்தகங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய அபிவிருத்தித் தி;ட்டங்களாகும்.
அமைச்சரகளான போரசிரியர் ஜீ.எல் பீரிஸ்- விமல் வீரவன்ச- டக்ளஸ் தேவானந்த- பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏ.எச்.எம். அஸ்வர்- நாமல் ராஜபக்ஷ- ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க- நிதியமைச்சின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர மற்றும் சீனாவூக்கான இலங்கைத் தூதுவர் ரஞ்சித உயன்கொட ஆகியோரும் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் வைபவத்தில் கலந்துகொண்டனர்.
-GA
Leave a comment