விருந்துண்டு, மரணத்தை பரிசாக வழங்கிய தலிபான்கள்: 7 பொலிஸார் பலி!

_57976976_afghan_kandahar_oct10[1]– OIT

கந்தகார்: பொலீசார் வாங்கித் தந்த உணவை வயிறாற சாப்பிட்டு விட்டு, அவர்களையே தங்கள் துப்பாக்கிகளுக்கு விருந்தாகி விட்டு தப்பிச் சென்றுள்ளனர் இரண்டு தாலிபான் கள். இச்சம்பவத்தில் 7 பொலீசார் கொல்லப்பட்டனர். ஆட்சி மாற்றம் வேண்டி தலிபான்கள்,  ஆப்கானிஸ்தானில் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

‘அரபு வசந்தம்’ என்ற பெயரில் கடந்த மாதம் அதிரடித் தாக்குதலை ஆரம்பித்த இவர்களின் தற்போதைய முக்கிய குறிக்கோள் ஆப்கன் பொலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரை கொல்வது தான்.இந்நிலையில், நேற்று இரவு கந்தகார் மாகாணத்தில் உள்ள பொலீஸ் சோதனைச்சாவடிக்கு வந்த இரண்டு நபர்களுக்கு அங்கேயே தங்க அனுமதியும் அளித்து, இரவு உணவும் வாங்கிக் கொடுத்து உபசரித்துள்ளனர் பணியில் இருந்த பொலீசார்.

ஆனால், சாப்பிட்டு முடிந்த கையோடு அந்த நபர்கள், திடீரென துப்பாக்கியால் சரமாரியாக பொலீசாரை நோக்கி சுட்டனர். இந்த திடீர் தாக்குதலில் 7 பொலீசார் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலத்த காயம் அடைந்த ஒருவர் மருத்துவமனியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குற்றவாளிகள் பொலீஸ் ஜீப்பிலேயே சோதனைச்சாவடியில் இருந்த ஆயுதங்களை அள்ளி போட்டுக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக காவல் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில் ‘தாக்குதல் நடத்திய 2 பேரும் இதற்கு முன்னர் காவல்துறையில் பணியாற்றியவர்கள். ஆனால் வேலையை விட்டு சென்றுவிட்டனர். அதன்பின்னர் மீண்டும் பொலீசில் சேர விரும்புவதாக கூறியுள்ளனர். ஆனால் விருந்து சாப்பிட்டதும் பொலீசாரையே கொன்றுவிட்டனர்’ என்றார்.

Published by

Leave a comment