பாசிக்குடா கடற்கரையை அழகு படுத்த நடவடிக்கை

pasikkudahகொழும்பு: சுற்றுலாப் பயனிகளின் வசதி கருதி கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறைக்கு பிரசித்தி பெற்ற பாசிக்குடா கடற்கரையை அழகுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக  சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் வள நிலைய அதிகாரி ஏ.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்புரைக்கு அமைவாக இக் கடற்கரைப் பிரதேசத்தில் துப்புரவு பணிகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதற்கமைவாக நேற்று  சிரமதான பணியொன்று இக்கடற்கரைபிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இக்கடற்கரையை அழகு படுத்தும் நடவடிக்கைக்கு, கல்குடா இராணுவம், கல்குடா பொலிஸார், சிறு வியாபாரிகள் சங்கம், சவாரி போட் சங்கம், ஹோட்டல் சங்கம், வாழைச்சேனை பிரதேச சபை, மீன் வியாபாரிகள் சங்கம் என்பன ஒத்துழைப்பு வழங்கி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

-GA

Published by

Leave a comment