காத்தான்குடி: சிங்கள மக்களின் பண்டிகைத் தினமான வெசாக் தினத்தில் மது போதையில் அபாயகரமாக வாகனம் செலுத்திய சாரதியை காத்தான்குடிப் பொலிஸார் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து அதிகாரி ஐ.பி.ஜயவர்த்தன தெரிவித்தார்.
காத்தான்குடிப் பொலிஸ் பிரிவிட்குட்பட்ட கல்லடிப் பிரதேசத்திலேய குறித்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சாரதியை காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து அதிகாரி ஐ.பி.ஜயவர்த்தனவின் வழிகாட்டலில் மோட்டார் போக்குவரத்து பொலிஸ் சார்ஜன்களான பாயிஸ், வசந்த, நிமால், பெண் பொலிஸ் உத்தியோகத்தர் உதயந்தி உள்ளிட்டோர் கைது செய்துள்ளனர்.
தற்போது காத்தான்குடிப் பொலிஸில் இருக்கும் குறித்த நபர் நாளை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளார்.
காத்தான்குடிப் பொலிஸ் பிரிவில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் மது போதையில் வாகனம் செலுத்தி காத்தான்குடிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றிற்கு ஆஜர்படுத்தப்பட்ட குறித்த சாரதிக்கு ரூபா இருபது ஆயிரம் தண்டப்பணத்தை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
![no-alcohol[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/05/no-alcohol1.jpg?w=103&h=105)
Leave a comment