லண்டன்: பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா இஸ்லாமிய போரம் ஏற்பாடு செய்துள்ள இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கான 10வது மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் ஜூன் மாதம் 15ம் மற்றும் 16ம் திகதிகளில் லெஸ்டர் நகரில் இடம்பெற உள்ளது.
பிரித்தானியாவில் வாழும் இலங்கை முஸ்லிம்கள் தங்களது குடும்பத்தினருடன் இம்மாபெரும் ஒன்று கூடல் நிகழ்வில் கலந்து கொள்வதற்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிகழ்வுக்கான குறுஞ்செய்தி அழைப்புக்கள் தற்பொழுது அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
இளைஞர்களுக்கான மாநாடு, சிறுவர்களுக்கான போட்டிகள், சகோதரிகளுக்கான நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள், உரை நிகழ்ச்சிகள் என்பன இடம்பெற இருக்கின்றன.
எதிர்வரும் ஜூன் மாதம் 15, 16 ஆம் திகதி வார இறுதி நாட்களில் மார்க்பீல்ட், லெஸ்டர் எனும் இடத்தில் இருநாள் நிகழ்வாக இடம்பெறவுள்ள இவ் ஒன்றுகூடல் நிகழ்வுக்கு, பின்வரும் தொலை பேசி இலக்கங்கள் ஊடாக அல்லது சிறிலங்கா இஸ்லாமிய போரத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக தங்களது வருகையை முன்கூட்டி பதிவு செய்யுமாறு கேட்கப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு:
மிஸ்காத்: 07877997626
நஸீர்: 07528530306
இணையம்: www.slif.org.uk
![slif__banner[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/03/slif__banner1.gif?w=102&h=107)
Leave a comment