பிக்கு தீ குளிக்கவில்லை! கொல்லப்பட்டார்!

monk-AF 47

கொழும்பு: கடந்த வெள்ளிக்கிழமை கண்டி தலதா மாளிகை அருகில் போவத்த இந்திரட்ன தேரர் தீக்குளித்ததாக தெரிவிக்கப்பட்ட செய்திகளில் உண்மை இல்லை எனவும், இத்தீக்குளிப்புக்குப் பின்னால் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி இருப்பதும் மக்களை சிந்திக்கவைத்திருக்கின்றன.

பெற்றோல் தெரிக்கப்பட்டிருந்த குறித்த பிக்குவை ஓர் வெள்ளை நிற மேல்சட்டை (சேர்ட்) அணிந்த ஒருவர் ‘லைட்டர்’ ஒன்றின் மூலமாக எரிப்பதை புகைப்படங்களும், வீடியோக்களும் தெளிவாக எடுத்துக்காட்டி இருப்பதானது, இது ஒரு நாடகம் என்பதை தெட்டத்தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

அரசியல் பின்புலங்கள் இக்கொலைக்குப் பின்னால் இருப்பதாகவும் தெரியவருகிறது. குறித்த பிக்குவை எரிப்பதும், அவரைக் காப்பாற்றாமல், அவர் எரியும் காட்சிகளை திட்டமிட்டு புகைப்படம், வீடியோ எடுத்திருப்பதும் மனித நேயத்துக்கு அப்பாற்பட்ட விடயம் மாத்திரமன்றி, ஊடக தர்மத்திற்கும்  எதிரானவை என குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

இலங்கை முஸ்லிம்கள் மீது அண்மைக் காலமாக சிங்கள பேரினவாதக் குழுக்கல் பல்வேறு வகையான தாக்குதல்களையும் திட்டங்களையும் தீட்டிவருகின்றன. அவற்றுள் ஹலால் அகற்றல் வெற்றி பெற்றிருப்பினும், ஏனைய திட்டங்களை செயற்படுத்துவதில் பாரிய சிக்கல்களையும், சவால்களையும் இவ்வமைப்புக்கள் சந்தித்து வந்தன.

இதே போல் குறித்த இயக்கங்களுக்கு எதிராக பெரும்பான்மையான சிங்கள  மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்ததாலும், இவ்வியக்கங்களின் கூட்டங்களில் கலந்துகொள்ளாது தட்டிக்கழித்து வந்ததாலும், ஆத்தரிமடைந்த இவ்வியக்கங்களும், இவ் இயக்கங்களின் பின்னணியினரும் பல திட்டங்களை பேரின மக்களை, முஸ்லிம்கள் மீது தீண்டுவதற்கு முயற்சித்தும் வந்தனர். எனினும் இத்திட்டங்கள் பல தோல்வியில் முடிவடைந்திருந்தன.

எனவே நாட்டிலுள்ள பேரின மக்களை ஒன்றாக இணைப்பதற்கான ஓர் அடிப்படைத் திட்டத்தில் ஓர் பிக்கு இன்று அநியாயமாகக் கொல்லப்பட்டிருக்கின்றார். அவர் கொல்லப்படும் காட்சிகள், புகைப்படங்கள் தெட்டத்தெளிவாக நிரூபித்தும் இருக்கின்றன.

எனவே, இக்கொலையைப் புரிந்தவர்கள் சட்டத்தின் முன்னிலையில் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இதன் பின்னணி யார் என்பதை மக்கள் சிந்தித்து தெரிந்துகொள்ள வேண்டும்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னணியிலும் பல சந்தேகங்கள் எழுகின்றன. குறித்த பிக்குவின் இறுதிக் கிரியைகளை கொழும்பில் ஏற்பாடு செய்து, அதன் மூலமாக ஓர் இனவாதத்தை தூண்ட இதன் பின்னணியில் சில இயக்கங்கள் செல்வாக்குகளுடன் செயற்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.

429908_423305187768846_1906999175_n[1]

பட விளக்கம்:

1- நீல நிற வாகனத்திற்குள் கமெரா இருக்கின்றது. பிக்கு பீதியுடன் காணப்படுகிறார். அவர் அருகில் வெள்ளை நிற சட்டை அணிந்த நபர்

2- லைட்டரை தீ பற்ற வைக்கிறார்

3- பிக்குவின் உடலில் தீயை திணிக்கிறார்

4- பிக்குவின் ஆடை தீப்பற்றுகிறது.

(படம்: முகநூல்)

Published by

3 responses to “பிக்கு தீ குளிக்கவில்லை! கொல்லப்பட்டார்!”

  1. The guy tries to grab the lighter to protect the Thero…

    Here is the video, you can clearly see it… https://www.facebook.com/photo.php?v=270659789746447

    “O you who have believed, be persistently standing firm for Allah , witnesses in justice, and do not let the hatred of a people prevent you from being just. Be just; that is nearer to righteousness. And fear Allah ; indeed, Allah is Acquainted with what you do.”(Quranhe 5:8)

    “முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) – பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.” 5:8.

  2. Ahmad Mazahir Avatar

    Brother Mahir Rashad, As you say the video in your link is not clear as you said, what you have quoted from Al Qur’an is absolutely correct, but the matter is still under suspision, we do not need to blame our people as the commit injustice. Let people comment freely.

  3. don’t make problem in betweetn us and them before put any thing you must make sure about this mater…………………

Leave a reply to Ahmad Mazahir Cancel reply