பிக்குவின் கொலை: 1983 ஜூலைக் கலவரத்தின் பின்னணியில் முஸ்லிம்களை இலக்கு வைக்க மற்றுமொரு சதி!

-AF 47

article-2277907-178BDA74000005DC-690_634x482[1]கொழும்பு: கடந்த வெள்ளிக்கிழமை கண்டியில் தீப்பற்றி படு கொலை செய்யப்பட்ட பிக்குவின் மரணத்தின் பின்னர், தாங்கள் செய்த நாடகத்தின் உண்மையை சர்வதேசம் இன்று தெளிவாக அறிந்துகொண்டிருக்கும் நிலையிலும், செய்வதறியாது இக்கொலையின் ஏற்பாட்டாளர்கள் தட்டுத்தடுமாறியிருக்கும் நிலையிலும், அடுத்தகட்ட நடிவடிக்கைகள் துரிதமாக மேற்கொண்டு, உண்மையை மறைக்க கடும் பிரயத்தனங்களை சம்பந்தப்பட்டவர்கள் எடுத்து வருகின்றனர்.

1983 ஜூலை 23ம் திகதி யாழ்ப்பாணம், திருநெல்வேலி: மாலையில் பொலிஸ் வாகணத் தொடரணி சென்றுகொண்டிருந்தது. பல அதிகாரிகளும் வாகனத்தில் இருந்தனர். பாதுகாப்புக்கு இராணுவத்தினரின் வாகனங்களும் சென்றுகொண்டிருந்தன.

வீதியில் புதைக்கப்பட்டிருந்த நிலக்கண்ணிவெடியில் இலக்குவைக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் வாகனம் அதிர்ஷ்டவசமாக தப்பிப்பிளைக்கிறது. சம்பவத்தில் இருவர் மாத்திரமே காயப்பட்டனர். எனினும் கிட்டு தலைமையில் வீதிக்கருகில் பதுங்கி இருந்த விடுதலைப் புலிகள், கண்ணி வெடி அதிர்ச்சியில் நிலை குளம்பிப்போயிருந்த இராணுவத்தினரை நோக்கி இயந்திரத்துப்பாக்கியால் சுடுகின்றனர். சற்றும் எதிர்பாராத இலங்கை இராணுவத்தினர் நிலத்தில் சுருண்டு மடிகின்றனர். இறுதியில் ஒரு அதிகாரி உட்பட 13 இராணுவத்தினர் அவ்விடத்தில் கொல்லப்பட்டனர்.

கொழும்பு அதிர்கிறது. அப்போதைய ஜனாதிபதி ஜயவர்த்தனாவின் சதித்திட்டத்தினால் ஊடகங்கள் தங்களது பாணியில் எழுதித்தள்ளின. அப்போதைய இலத்திர ஊடகங்களாக இருந்த இலங்கை வானொலியும், ரூபவாஹினியும் சம்பவத்தைத் திரிவு படுத்தி, உறங்கிக்கிடந்த சிங்கள மக்களை விழித்தெழ வைத்தன. கொழும்பில் கலவரத்துக்கான ஏற்பாடுகள் திட்டமிடப்படுகின்றன.

கொல்லப்பட்ட 13 இராணுவ வீரர்களின் சடலங்களையும் கொழும்புக்கு எடுத்துவந்து மக்கள் முன்னிலையில் வைக்குமாறு ஜனாதிபதி ஜயவர்த்தனா கட்டளையிட்டார். சுதந்திர சதுக்கத்தில் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டிருந்த 13 இராணுவ வீரர்களின் சடலங்களையும் கண்ட மக்கள் கொதிப்படைந்தனர். கச்சிதமாக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. பொரளை கனத்தையில் இறுதிக்கிரியைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள சிங்கள மக்கள் ஒன்றிணைக்கப்பட்டு, அன்றிரவு தழிழ் மக்கள் வேட்டையாடப்படுகின்றனர். இறுதியில் கொழும்பு தீப்பற்றி எரிகிறது.

305[1]

இதே மாதிரி ஒரு நாடகத்தை இன்றைய பேரினவாத இயக்கங்கள் திட்டமிட்டு இருக்கின்றன. இவர்களுக்கு உறுதுணையாக மறைவான அரசியல் பின்னணிகள் இருப்பது தெளிவாகி இருக்கின்றது. இந்நாட்டில் முஸ்லிம்களை முடக்க வேண்டும். அல்லது அழிக்க வேண்டும் என பேரினவாதக் குழுக்கள் ஊடகங்களுக்கு பகிரங்கமாக தினந்தோரும் அறிவித்து வருகின்றனர். இதற்கென தனியான வானொலி, அச்சூடகங்களும் திறைமறைவிலும், பகிரங்கமாகவும் இயங்கி வருகின்றன.

பிக்குவை எரித்துக் கொன்றுவிட்டு, மிருகங்கள் கொல்லப்படுவதற்கு எதிராக அவர் தீ குளித்தார் என செய்திகள் திரிபுபடுத்தப்பட்டிருந்தாலும், அவை இன்று திரைமுன் கிழித்தெறியப்பட்டிருக்கின்றது. இதனால் இந்ந நாடகத்தை அரங்கேற்றியவர்களின் முகத்திரைகள் கிழிக்கப்பட்டிருப்பதுடன், தங்களது திட்டம், கச்சிதமாக கசிந்ததற்கு (ஒளி, புகைப்படங்கள்) காரணமானவர்களை சிறைப்படுத்தி விசாரிக்கும் அளவுக்கு, இவர்களின் ‘சின்னப்பிள்ளத்தனம்’ இருந்துவருவது வேடிக்கையானது.

தீ பற்றி கொலைசெய்யப்பட்ட பிக்குவின் இறுதிக்கிரியையை  கொழும்பில் நடாத்த வேண்டும் எனவும், சடலத்தை மக்கள் மத்தியில் காட்சிப்பொருளாக பல நாட்கள் வைத்து, அரசியல் இலாபம் தேடி, சிங்கள மக்களை கொழும்புக்கு அழைத்து, முஸ்லிம்கள் மீது ஓர் விரோதத்தை ஏற்படுத்துவதற்கு இதன் பின்னணியில் உள்ளவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் தான் நேற்று முன்தினம் சிலர் கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதுமாத்திரமன்றி நேற்று கண்டியில் ஆரோக்சமான வார்த்தைப் பிரயோகங்களுடன் முஸ்லிம்களை இலக்குவைத்து ஓர் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. நாளை இன்னுமொரு ஆர்ப்பாட்டம் எங்காவது இடம்பெறலாம்.

article-2277907-178BDA74000005DC-690_634x482[1]

முஸ்லிம்களை பல வழிகளிலும் நசுக்குவதற்கு திட்டம் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இவர்களின் பல திட்டங்கள் செல்லாக் காசுகளாக சென்றன. எனவே இறுதியாக சிந்தித்து ஓர் நாடகத்தையும் நிகழ்த்திப் பார்த்தனர். எனினும் ‘வடை போச்சே’ என்று மீண்டும் தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டு, இதன் பின்னணியிலுள்ளவர்கள் இன்று ஏமாந்து போய் இருக்கின்றனர்.

எனவே, துவேசத்தனமான இவர்களின் தந்திரங்களில் முஸ்லிம்கள் மிக அவதானமாக இருக்கவேண்டும். இவர்களின் இலக்கு இலங்கை முஸ்லிம்களை குறிவைப்பதே. ஏதாவதொரு விடயத்தில் முஸ்லிம்களை நசுக்க நாள் தோரும் ஓர் திட்டத்தை வகுத்து வருகின்றனர். அரசாங்கமும் கண்கட்டி வித்தைபோல், முட்டிகளை உடைக்காமல், பார்வையாளர்களை  தாக்கிவருவது வேடிக்கையானதே!

Published by

Leave a comment