திருட்டுச்சம்பவம் தொடர்பில் மட்டுவில் 1இலட்சத்து 60ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது-ஒருவர் கைது

– பழுளுல்லாஹ் பர்ஹான்

???????????????????????????????மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடிப் பொலிஸ் பிரிவில் தம்பியப்பா வீதி,ஆரையம்பதி எனும் முகவரியில் உள்ள வீடொன்றில் கடந்த ஏப்ரல் 25ம் திகதி களவு போன சுமார் 1இலட்சத்து 60ஆயிரம் ரூபா பெறுமதியான LCD தொலைக்காட்சி அடங்கலாக செல்லிடத் தொலைபேசிகள் நேற்று முன்தினம் மே 25ம் திகதி காத்தான்குடிப் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ரணசிங்க  தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் குற்றங்களை தடுக்கும் அதிரடி நடவடிக்கையின் பயனாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.இந்திரனின் ஆலோசனையின் பேரில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஐ.பி.ரணசிங்கவின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் நிலைய எஸ்.ஐ.மங்கள தலைமையிலான குழுவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்தே குறித்த பெறுமதியான பொருட்கள் பாலமுனையில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த பெறுமதியான பொருட்களை பொலிஸ் சார்ஜன்களான சமிந்த,ரஹீம்,ஐ.பி.ரஹ்மான்,திஸாநாயக்க அடங்கலாக காத்தான்குடி பொலிஸ் நிலைய எஸ்.ஐ.மங்கள தலைமையிலான குழுவினர் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் முஹம்மட் முனாபிர்(புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்)என்பவரையும் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் கொழும்பைச் சேர்ந்தவர் எனவும் அண்மையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தற்போது மட்டக்களப்பு பாலமுனையில் வசிக்கின்றார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஐ.பி.ரணசிங்கவின் வழிகாட்டலில் பொலிஸ் குழுவினர் தேடி வந்ததுடன் பொருட்கள் சரியாக ஒரு மாதத்திற்குள் மீள பெறப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடிப் பொலிஸ் பிரிவில் குற்றங்களை தடுக்கும் வண்ணம் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

???????????????????????????????

???????????????????????????????

???????????????????????????????

 

Published by

Leave a comment