ஐரோப்பா சம்பியன்ஸ் கிண்ண இறுதிப்போட்டி: இறுதி நிமிட கோலால் பேயர்ன் மியூனிச் சம்பியன்!

bayern-munich-champions-league-final-wembley_2950416[1]– MJ

லண்டன்: நேற்று மாலை லண்டன் வெம்ப்ளி மைதானத்தில் இடம்பெற்ற ஐரோப்பா சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான (UEFA)  இறுதிப்போட்டியில் ஜேர்மனியின் இரு கழகங்களான பேயர்ன் மியூனிச் மற்றும் டொட்மண்ட் கழகங்கள் மோதின.

தொன்னூராயிரம் இரசிகர்களாலும், பாதுகாப்பு அதிகாரிகளாலும் நிறைந்திருந்த வெம்ப்ளி அரங்கில் 2:1 என்ற கோல் அடிப்படையில் பேயரன் மியூனிச் சம்பியனாக முடிசூடிக் கொண்டது.

இடைவேளை வரைக்கும் கோல்கள் எதுவுமின்றி இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. இடைவேளையின்  பின்னரான போட்டியில் இரு அணிகளும் 1:1 என்ற அடிப்படையில் கோல்களை பெற்றிருந்தபோதிலும், போட்டியின் 89வது நிமிடத்தில் பேயர்ன் மியூனிச் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரூபன் அடித்த கோலால் இறுதி நேரத்தில் பேயரன் மியூனிச் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

இவ் வெற்றியுடன் பேயர்ன் மியூனிச் கழகம் 5வது தடவையாக ஐரோப்பா சம்பியனாக முடிசூடிக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

bayern-munich-champions-league-final-wembley_2950416[1]

arjen-robben-bayern-munich-borussia-dortmund-champions-league-final_2950384[1]

borussia-dortmund-bayern-munich-champions-league-final_2950305[1]

champions-league-trophy-borussia-dortmund-bayern-munich_2950260[1]

Published by

Leave a comment