முஸ்லிம்கள் மீது திசை திருப்பப்படும் பெளத்த பிக்குவின் மரணம்!

U-TURN-Logoவிசேட நிருபர்

கொழும்பு : ஆடு, மாடுகள் அறுக்கப் படுவதனைக் கண்டித்து கடந்த வெள்ளிக்கிழமை கண்டி தலதா மாளிகைக்கு அருகாமாயில் தீக்குளித்து இன்று மரணமான வண. போவத்த இந்திரட்ன  தேரரின் மரணத்தையடுத்து, தலை நகரிலும் சிங்கள பிரதேசங்களிலும் அனுதாப அலைகளும் சோகங்களும் எழுந்தவன்னமிருக்கின்றன. 
 
இலங்கை முஸ்லிம்கள் மீது அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிரவாதப் போக்குகளுக்கு இப் பிக்குவின் தீக்குளிப்பு மரணம் தற்பொழுது மீண்டும் திசை திருப்பப்படும் அபாயம் எழுந்திருக்கின்றது. 
 
ஆடு, மாடுகளை உணவுக்காக இலங்கையில் முஸ்லிம்களே அறுத்துக் கொல்கின்றனர் என பேரினவாத இயக்கங்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றன.
 
இலங்கையை பொறுத்த மட்டில் இலங்கையில் வாழும் அத்தனை மதத்தினரும் தங்களது உணவுக்காக உயிரினங்களை கொன்று வருகின்றனர். குறிப்பாக இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவுகளில் இறைச்சி உணவு கட்டாயமானதாக இருந்து வருகிறது. 
 
இராணுவ வீர்ரர்களை சோர்வடையாமல் உற்சாகமாக வைத்திருப்பதற்காக வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களுக்காவது மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, கோழி இறைச்சி வழங்கப்பட்டு வருகின்றன. அது மாத்திரமன்றி, இலங்கையில் வாழும் நான்கு மதத்தினரதும் திருமணம், பெருநாள் மற்றும் ஏனைய விசேட தினங்களில், உணவுகளில் பிரதானமாக இறைச்சி பயன்படுத்தப் பட்டு வருகிறது. 
 
மேலும், பாராளுமன்றம், அரசியல் பிரமுகர்களின் விருந்தோம்பல்கள், நட்சத்திர ஹோட்டல்கள், விடுதிகள் போன்றவற்றின் உணவுகளில் இறைச்சி வகைகளே பயன்படுத்தப் பட்டு வருகின்றன. இறைச்சியைப் பெற வேண்டுமாயின் மிருகங்கள் கொல்லப்படவே வேண்டும். 
 
எனவே, குறித்த பௌத்த பிக்கு ஆடு, மாடுகளை மாத்த்திரம் குறிவைத்து தீக் குளித்தாரா? அல்லது பொதுவாக அத்தனை மிருகங்களும் உணவுக்காக கொல்லப்படுவதற்கு எதிராக தீக்குளித்தாரா? என்பதை சம்பத்தப்பட்டவர்கள் தெளிவு படுத்த வேண்டும். இல்லையேல், இலங்கையை ஒரு சைவ நாடாக அரசாங்கம் பிரகடணப்படுத்த வேண்டும். 
 
எனவே, வேடிக்கையும் விநோதமும் நிறைந்த இலங்கையின் பேரினவாதக் குழுக்களின் முஸ்லிம்களுக்கு எதிரான இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக, இன்னும் தூங்கிக்கொண்டு இருக்காமல் பொறுப்பு வாய்ந்தவர்களும் இயக்கங்களும் விழித்தெழ வேண்டும்.       

Published by

Leave a comment