பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் – நல்லாட்சிக்கான மக்கள் இயக்க தலைவர், செயலாளருக்கு பகிரங்க கடிதம்

Yourkattankudy
Yourkattankudy

பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நான் நிகழ்த்திய உரையை நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் என்பதை எண்ணி மனவேதனையடைகின்றேன். பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் – நல்லாட்சிக்கான மக்கள் இயக்க தலைவர், செயலாளருக்கு எழுதிய பகிரங்க கடிதம் வாசகர்களுக்காக…

26.05.2013

தலைவர், செயலாளர், 

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்,

C B காசிம் மாவத்தை, கடற்கரை வீதி,

காத்தான்குடி-06.

அன்புடன்,

அஸ்ஸாலாமு அலைக்கும் (வறஹ்)

தங்களுடனான நேரடி கலந்துரையாடல் எனும் தலைப்பிட்டு தாங்கள் எனக்கு அனுப்பிய கடிதம் 25.05.2013 அன்று கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ். கடந்த 22.05.2013ம் திகதி நடந்த தங்களுடைய சூறா சபை கூட்டத்தில் என்னுடன் பகிரங்க பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு தீர்மானித்ததாகவும் அதற்காக காலம் தாழ்த்தாது விரைவில் திகதியொன்றை தருமாறும் கேட்டிருந்தீர்கள்.

நான் 17.05.2013ம் திகதி அன்று ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நிகழ்த்திய உரையை நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் என்பதை எண்ணி மனவேதனையடைகின்றேன். இலங்கை நாட்டில் முஸ்லிம் சமூகம் தற்போது எதிர்நோக்கியுள்ள சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு தலை நிமிர்ந்து வாழ்வதற்கு முதலில் முஸ்லிம் உம்மத்துக்கிடையில் சகோதர உணர்வும் ஒற்றுமையும் பலமாக இருப்பது இன்றைய காலகட்டத்தின் கட்டாய தேவையாகவிருக்கின்றது.

எமது தாய் நாடான இலங்கை நாட்டின் சட்டப்படி தேர்தல் காலங்களில் நாம் வெவ்வேறு குழுக்களாக பிரிந்து போட்டியிட்டாலும் தேர்தலுக்கு பின்பு நாங்கள் காத்தான்குடி வாழ் ஒரு தாய் மக்கள் என்ற சகோதர உணர்வுடனும், போட்டி, பொறாமை, சுயலாபங்களுக்கு அப்பால் இந்த ஊரின் அபிவிருத்திக்காகவும், எமது எதிர்கால சந்ததியினரின் நலன் கருதியும் நாம் ஒன்றுபட்டு செயற்படவேண்டியது எமது கடமையாகும். இதையே அல்-குர்ஆனும் வலியுறுத்துகின்றது. நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்)சகோதரர்கள் தாம்.எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள். 49:10

இத்தகைய அரசியல் கலாசாரத்தை கருத்திற்கொண்டே நான் உங்களுடன் ஊரின் அபிவிருத்தி தொடர்பாக குறைந்தது மூன்று மாதத்திற்கொரு முறையாவது கலந்துரையாடுவதற்கு தயார் என்று மேற்படி கூட்டத்தில் பேசியிருந்தேன். ஆனால் நீங்கள் அழைத்திருப்பது போன்ற பகிரங்க பேச்சுவார்த்தை என்ற பெயரில் அமைந்த ‘விவாதத்திற்கு’ அல்ல. இவ்வாறான பகிரங்க மேடைகளில் நீங்கள் எங்களை விமர்சிக்க, அதன் பின்னர் நாங்கள் உங்களை விமர்சிக்க இறுதியில் எதற்கும் பிரயோசனமற்ற ஒரு கலந்துரையாடல் மேடையாகவே அது அமையும்.

நீங்கள் சொல்வதை போன்ற மேடைகளை அமைக்கும் போது அது எமக்கிடையில் இருக்கும் கருத்துவேறுபாடுகளை அதிகரிக்குமே தவிர ஆக்கபூர்வமான எந்தவொரு அபிவிருத்திக்கும், நல்ல திட்டங்களுக்கும் வித்திடாதென்பது உண்மையாகும்.

நான் அழைத்த கலந்துரையாடலின் நோக்கம் நமது கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் நாம் ஒன்றிணைந்து நம் மண்ணை கட்டியெழுப்புவதற்காககவும், நமது நாட்டு முஸ்லிம்களின் பிரட்சினைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ளவும், நமது பிரதேசத்தின் முன்னேற்றத்திற்காகவும் தங்களுடன் கலந்தாலோசித்து நல்ல திட்டங்களை உருவாக்குவதே ஆகும். இவ்வாறான ஒரு கலந்துரையாடலுக்கு நீங்கள் அழைக்கும் பட்சத்தில் இன்ஷா அழ்ழாஹ் என்னுடைய நேரத்தை ஒதுக்குவதற்கு நான் தயாராக இருக்கின்றேன் என்பதை மீண்டும் கூறிக்கொள்கின்றேன்.

எம்மனைவரின் நல்லெண்ணங்களையும், நல்ல செயல்களையும் அழ்ழாஹ் அங்கீகரித்து நாம் அனைவரும் ஓற்றுமையாக சகோதர மனப்பான்மையுடன் வாழ்வதற்கும், ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் கிடைப்பதற்கும், நாம் அனைவரும் நேரான பாதையில் செல்வதற்கும் அழ்ழாஹ் துணை புரிவானாக என்னும் துஆ பிரார்த்தனையுடன் விடைபெறுகின்றேன்.

வஸ்ஸலாம்,

இவ்வண்ணம்,

MLAM. ஹிஸ்புழ்ழாஹ் MP

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர்.

Published by

3 responses to “பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் – நல்லாட்சிக்கான மக்கள் இயக்க தலைவர், செயலாளருக்கு பகிரங்க கடிதம்”

  1. f விழுந்தாலும் மீசைல மன்படல சார் – சந்தர்ப்பவாதி என்பதை மீண்டும் ஒருமுறை ப்ரூப் பன்னிரிக்காறு

  2. 17 hours ago
    உசாராகிட் டாங்கிய்யா
    உசாரகிடாங்கிய்யா

    பாவிப் பயலுகள்
    வாயத்திறந்தா அப்பிடியோ
    பிடிச்சிகிராங்கிய்யா

    தொண்டர்கல்ற குசும்புக்குத்தாங்கிய்யா
    சும்மா ஒரு பேச்சு உட்டங்கிய்யா

    நானா விவாதத்துக்கா பகடி தெரியாதங்கிய்யா உங்களுக்கு
    நானொரு பைத்திய கரணைய்யா ஐயோ………………
    கிழிக்க போராங்கிய்யா…………… கிழிக்க போராங்கிய்யா …………….

    பாவிப் பயலுகள் கிளம்பிட்டாங்கிய்யா………..
    கிளம்பிட்டாங்கிய்யா ………..

    சொல்லுங்க நான் என் வாழ்கையில
    ஒரு உண்மையாவது பேசி இரிக்கேங்கிய்யா ………
    சொல்லுங்கையா தொண்டர்களே குண்டர்களே பொதுஜனமே

    நான் செய்யாத சேவையய்யா
    ஐய்யா என்தொடர்கள பாருங்கிய்யா
    வாயிருந்தும் ஊமைகளா
    காதிருந்தும் செவிடர்களா
    மூளை இருந்தும் மடையர்களா ஆக்க முடியுமா ஐய்யா
    இவிங்கிளால செய்ய முடியுமாய்யா

    அலீம்களையும் புத்திஜீவிகளையும்
    கிளிப்பிள்ளை மாதிரி ஆகினேன்ய்யா

    இலஞ்சர்கள குண்டர்களா ஆக்கினேன்ய்யா
    யோவ் நலீமி முடியுமைய்யா
    சேவையாம் சேவை கொமிசன் இல்லாம
    இம்மா துண்டு ரோட்ட போட்டுட்டு
    இடி முழங்கிற மாதிரி முலங்கிராங்கிய்யா
    கொமிஷன் இல்லாதது எல்லாம் ரோட்டா

    வந்துட்டானுங்கையா பாவிப் பயலுகள்
    என் புளைப்புல மண்ணப்போட
    கிளம்பிட்டாங்கிய்யா

    சத்தியமெல்லாம் சும்மா வட சாப்பிற மாதிரிய்யா
    நான் மேடையில தான்யா புலி
    தானிய வந்த நான் எலி யய்யா

    வந்தாட்டங்கிய்யா வந்திட்டாங்கிய்யா
    சும்மா ஒரு தமாசுக்கு சொல்லிட்டா
    பிடிச்சிகியாங்கியாக்கும்

    யோவ் அ-ர,
    நான் சொன்னேனா……. நான் சொன்னேனா…… ஐயா
    ஒரு தமாசுக்கு உட்டுபார்தேன்கிய்யா
    சும்மா ஒரு பில்டப்தான்கிய்யா

    கீ …கீ…கீ
    உட்டேன் பாரு சிளிங்கோவில
    சும்மா 10 கோடி
    நாந்திரிடிநேனா?
    இவங்க விபரம் தெரியாத சின்ன பிள் ளைகலீங்கய்யா
    என் பொண்டாட்டி பெயர்ல தானைய்யா எடுத்தேன்

    குவைத்சிட்டியில எடுத்தனா நானா
    அரபி செக்கித்தானைய்யா தந்தான்
    அரபு நாட்டு காசு கலால் தானைய்யா

    கொமிசனாம் கொமிசன்
    அவன் பாவிப்பயல் சிப்ளியிட்ட கேட்டுப்பாருங்கிய்யா
    15விகிதம் தானய்யா தந்தான்
    யோவ் சிப்லி செல்லன்ய்யா சொல்லி தொலைய்யா

    கவுண்டா உன் பாசையில் சொல்லிய்யா
    ஒக்கா மொக்ககா
    அரசியலல்ல இதெல்லாம் ஜகஜம் மடா

    யோவ் ரகு உன்பாசையிலயாவது புரி இர மாதிரி சொல்லிய்யா
    ஹெலோ அப்துர் ரஹ்மான் யோவ்…..யோவ் ….யோவ் …………
    நிறுத்து ………..நிறுத்து ………நிறுத்துயா …
    உன் மூச்ச நிருத்திடுவேன்யா இல்ல ….

  3. ஊர் மகன் Avatar
    ஊர் மகன்

    இந்த நாட்டில் JVP எவ்வாறு நடந்து கொள்கிறதோ, அதேபோன்றதொரு அரசியல் நடைமுறையைத்தான் எமதூரில் PMGG நடைமுறைப்படுத்துகிறது. கணினி உபயோகிப்பவர்கட்கு தெரியும், நாம் இணையதளங்களை உபயோகிக்கும்போது வைரஸ் தாக்கம் ஏற்படுகிறது. இது இயற்கையான ஒரு அல்லது எதார்த்தமான ஒரு தாக்கம் அல்ல. கம்ப்யூட்டர் அறிவு கூடிய படித்த நபர்கள், தங்களுக்கு தெரிந்தவற்றை நேரான பாதையில் சென்று முன்னேற சந்தர்ப்பம் இல்லாதபொது தங்களின் மன சாந்திக்காக இவ்வாறான வைரஸ் PROGRAMME கலை உருவாக்கி அதை இணையத்தில் பரவச்செய்து சந்தொசமடைவது. ஆனால் அந்த வைரஸ் தாக்கியவுடன் அதற்கான வைரஸ் GUARD களை கண்டு பிடித்து நாங்கள் எங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டே போகிறோம். இதற்காக நாம் கம்ப்யூட்டர் பாவனையை கை விட முடியாது. அதுபோல இந்த PMGG காரர்களும் கத்துவார்கள்தான் நாம் அதற்கான தீர்வை யோசித்து முன்னேறி செல்வதுதான் ஒரே வழி.

    அதற்காக படையப்பா பாணியில் செல்லாமல் காந்தி தாத்தா போல சமூக உணர்வுடன் செயல் பட வேண்டும்

Leave a reply to YAMAN Cancel reply